For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே மேட்ச்.. கோலியை குற்றவாளியாக்கிய ரோஹித் சர்மா.. சாதனைகளை உடைத்து மிரட்டிய ஹிட்மேன்!

Recommended Video

Rohit breaks new sixer record | சிக்ஸரில் புது வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா

விசாகப்பட்டினம் : ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் பல்வேறு சாதனைகள் செய்து தன்னை அணியில் எடுக்காமல் விட்ட கேப்டனை குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.

ஆம், விராட் கோலியை டெஸ்ட் போட்டியில் தான் துவக்க வீரராக ஆடிய ஒரே போட்டியில் குற்றவாளியாக மாற்றி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்து மிரட்டி இருக்கிறார்.

அணியில் இடம் மறுப்பு

அணியில் இடம் மறுப்பு

இதே ரோஹித் சர்மாவுக்கு கடந்த சில வருடங்களில் டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்பட்டது. கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் அளிக்கப்படவில்லை. ஒருநாள், டி20யில் துவக்க வீரராக இருக்கும் ரோஹித்தை டெஸ்டில் மட்டும் மிடில் ஆர்டர் வீரராக கருதி, சரியாக ஆடவில்லை என வாய்ப்பளிக்காமல் இருந்தது இந்திய அணி நிர்வாகம்.

மிரட்டல் ஆட்டம்

மிரட்டல் ஆட்டம்

தென்னாப்பிரிக்க தொடரில் முதன்முறையாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ரோஹித் சர்மா. முதல் டெஸ்டிலேயே மிரட்டலாக ஆடினார். இரண்டு இன்னிங்க்ஸிலும் 176 மற்றும் 127 ரன்கள் என இரண்டு சதம் அடித்தார்.

பெரிய குற்றம்

ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸிலும் ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்த பலருக்கும் தோன்றிய எண்ணம் - இவரை ஏன் இத்தனை நாள் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆட வைக்கவில்லை? சரியான வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பது தான். அவருக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் விட்டது பெரிய குற்றம் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

சாதனைகள் பேசும்

சாதனைகள் பேசும்

இனி ரோஹித் சர்மாவை அணியில் எடுக்கவில்லை என்றால் இந்தப் போட்டியில் ரோஹித் செய்த சாதனைகள் அவருக்காக பேசும். அந்த அளவுக்கு பல சாதனைகளை முறியடித்து இருக்கிறார் ரோஹித்.

துவக்க வீரர் அறிமுகம்

துவக்க வீரர் அறிமுகம்

துவக்க வீரராக அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக தென்னாப்பிரிக்க வீரர் வெசல்ஸ் 208 ரன்கள் எடுத்து இருந்தார். அதை முந்திய ரோஹித் 303 ரன்கள் குவித்தார்.

டிராவிட் சாதனை காலி

டிராவிட் சாதனை காலி

சொந்த மண்ணில் தொடர்ந்து 50+ ரன்கள் அடிப்பதில் ராகுல் டிராவிட் சாதனையை முந்தி இருக்கிறார் ரோஹித். டிராவிட் சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறு 50+ ரன்கள் அடித்து இருந்தார். ரோஹித் சர்மா ஏழு முறை தொடர்ந்து 50+ ரன்கள் அடித்து இருக்கிறார்.

இந்திய மண்ணில் சிக்ஸ்

இந்திய மண்ணில் சிக்ஸ்

இந்திய மண்ணில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ போட்டிகளிலும் தன் வசம் வைத்துள்ளார் ரோஹித் சர்மா.

உலக அளவில் அதிக சிக்ஸ்

உலக அளவில் அதிக சிக்ஸ்

மேலும், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 6 சிக்ஸ், இரண்டாம் இன்னிங்க்ஸில் 7 சிக்ஸ் அடித்த ரோஹித், ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வாசிம் அக்ரமின் (12 சிக்ஸ்) 23 ஆண்டு சாதனையை முறியடித்தார் ரோஹித்.

இரண்டு இன்னிங்க்ஸ் சதம்

இரண்டு இன்னிங்க்ஸ் சதம்

இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த ரோஹித், துவக்க வீரராக முதல் போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதை விட மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்துள்ளார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

சொந்த மண்ணில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி 100க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். டான் பிராட்மன் 98.22 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.

Story first published: Saturday, October 5, 2019, 19:07 [IST]
Other articles published on Oct 5, 2019
English summary
IND vs SA : Rohit Sharma make Virat Kohli into a criminal after breaking so many records in his first attempt as opener in test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X