Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகிலேயே யாரும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேஜிக் செய்த இந்திய ஜோடி!

Recommended Video

IND VS SA 1ST TEST | ROHIT SHARMA INNINGS | விமர்சங்களுக்கு பதில் கொடுத்த ரோஹித் ஷர்மா-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் ஜோடி பல சாதனைகளை அடித்து நொறுக்கியது.

கூட்டணியாக இவர்கள் இருவரும் பல சாதனைகளை உடைத்த நிலையில், உலகில் இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த துவக்க ஜோடியும் செய்யாத சாதனையை செய்துள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அசத்தல் துவக்க ஜோடி

அசத்தல் துவக்க ஜோடி

இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 176 ரன்களும், மாயங்க் அகர்வால் 215 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்து மேஜிக் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சாளர்கள் இவர்களை அவுட் ஆக்க முடியாமல் 81 ஓவர்கள் வரை திணறினர்.

இந்திய மண்ணில் முதல் போட்டி

இந்திய மண்ணில் முதல் போட்டி

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் முதன்முறையாக இணைந்து துவக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் துவக்க வீரராக தன் முதல் டெஸ்டில் ஆடினார். மாயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

47 ஆண்டு சாதனை

47 ஆண்டு சாதனை

47 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு துவக்க வீரர்களும் ஆடும் நிகழ்வு நடந்துள்ளது. முன்னதாக 1972இல் சுனில் கவாஸ்கர் - ராம்நாத் பார்க்கர் ஜோடி இந்திய மண்ணில் தங்கள் முதல் டெஸ்டில் ஒரே நேரத்தில் ஆடி, அணிக்கு துவக்கம் அளித்தனர்.

சதம் கடந்து சாதனை

சதம் கடந்து சாதனை

ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில், அதிலும் சில சாதனைகள் படைத்துள்ளனர். அதில் ஒரு சாதனை இதுவரை எந்த துவக்க ஜோடியும் நிகழ்த்தாத சாதனை ஆகும்.

யாரும் செய்யாத சாதனை

யாரும் செய்யாத சாதனை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இதுவரை எதிரணியின் இரு துவக்க வீரர்களும் ஒரே போட்டியில் சதம் அடித்ததில்லை. அதை முதன்முறையாக நிகழ்த்தி சாதனை புரிந்து இருக்கிறது ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் ஜோடி.

கூட்டணியாக அதிக ரன்கள்

கூட்டணியாக அதிக ரன்கள்

மேலும், முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த துவக்க ஜோடி என்ற சாதனையை செய்துள்ளது. முன்னதாக, கேரி கிர்ஸ்டன் - ஆண்ட்ரூ ஹட்சன் முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

இந்திய துவக்க வீரர்களில் முதல் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் சேர்த்த கூட்டணியின் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது ரோஹித் - மாயங்க் ஜோடி. மன்கட் - ராய் 413 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், டிராவிட் - சேவாக் 410 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 317 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் ரோஹித் - மாயங்க் உள்ளனர்.

இரண்டு பேரும் சதம்

இரண்டு பேரும் சதம்

இந்திய மண்ணில் துவக்க வீரராக தங்கள் முதல் டெஸ்டில் ஆடிய இருவரும் சதம் அடித்து புதிய சாதனை செய்தனர். மேலும், இந்திய துவக்க வீரர்கள் இருவரும் ஒரே போட்டியில் சதம் அடிப்பது பத்தாவது முறையாக நடந்துள்ளது.

Story first published: Friday, October 4, 2019, 10:30 [IST]
Other articles published on Oct 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+