Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் அதை மட்டும் செஞ்சா போதும்.. கோலியே நினைச்சாலும் அவரை டெஸ்ட் டீமை விட்டு தூக்க முடியாது!

Recommended Video

Rohit Sharma need big innings | ஒரே ஒரு பெரிய இன்னிங்க்ஸ் போதும்: ரோஹித் சர்மாவுக்கு அரிய வாய்ப்பு

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள "ஹிட்மேன்" ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார்.

ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 அணியில் முன்னணி வீரராக இருக்கும் அவர், டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கிடைக்குமா? என காத்துக் கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதை மாற்ற இது தான் சிறப்பான வாய்ப்பு.

அதே போன்ற வாய்ப்பு

அதே போன்ற வாய்ப்பு

இனி இது போன்ற வாய்ப்பு டெஸ்ட் போட்டிகளில் கிடைக்குமா? என தெரியாது. இன்னும் சொல்லப் போனால், ஒருநாள் போட்டிகள், டி20-யில் ரோஹித் சர்மாவின் வாழ்க்கையை தோனி எப்படி மாற்றினாரோ, அதே போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது.

தோனி நிகழ்த்திய மாற்றம்

தோனி நிகழ்த்திய மாற்றம்

முதலில் மிடில் ஆர்டர் வீரராக, ஆல் - ரவுண்டராகவே அணியில் இடம் பெற்றார் ரோஹித் சர்மா. அவரை துவக்க வீரராக மாற்றியது தோனி தான். அதன் பின்பு தான் ரோஹித் பட்டையைக் கிளப்பத் துவங்கினார்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். அதிகபட்சமாக மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ராகுல் சொதப்பல்

ராகுல் சொதப்பல்

இந்த வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம், துவக்க ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தது தான். கடைசியாக அவர் ஆடிய 30 இன்னிங்க்ஸ்களில் 664 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருந்ததால் வாய்ப்பை இழந்தார்.

ப்ரித்வி ஷா வருவார்

ப்ரித்வி ஷா வருவார்

ராகுல் நீக்கத்தால் துவக்க வீரராக இடம் பெற்ற ரோஹித் சர்மா, இனி அதே இடத்தில் ஆடலாம் என நிம்மதியாக இருக்கவும் முடியாது. காரணம், தற்போது தடையில் இருக்கும் இளம் வீரர் ப்ரித்வி ஷா மீண்டும் அணிக்கு திரும்புவார். அப்போது அவருக்கும் அணியில் இடம் அளிக்க வேண்டும்.

அரிய வாய்ப்பு

அரிய வாய்ப்பு

அதனால், ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ள துவக்க வீரர் என்ற இந்த வாய்ப்பு மிகவும் அரிது என்பதே உண்மை. அவருக்கு மிகவும் ஏற்ற இடமும் இது தான். தற்போது நடக்க உள்ள தென்னாப்பிரிக்க தொடரில் அவர் பெரிதாக ரன் குவித்து தன்னை நிரூபித்தே ஆக வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பாக ஒரு சதமாவது அடிப்பது அவசியம். அப்போது தான் கேப்டன் கோலியே நினைத்தாலும் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க முடியாது. மேலும், துவக்க வீரர் என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் மாற்றலாம்

எல்லாவற்றையும் மாற்றலாம்

இதுவரை டெஸ்ட் அணியில் தனக்கு இடம் கிடைக்குமா? என ஏங்கி வந்த ரோஹித் சர்மா, இந்த தென்னாப்பிரிக்க தொடருடன் அணியின் நிரந்தர வீரராக மாறலாம். மேலும், 32 வயதாகும் அவருக்கு இனி இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காது.

சஞ்சய் பங்கர் கருத்து

சஞ்சய் பங்கர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ரோஹித் சர்மா குறித்து சமீபத்தில் பேட்டியில் கூறுகையில், ரோஹித் சர்மா தன் பாணியில் பேட்டிங் செய்தால் இந்திய அணியால் சேஸிங்கில் இதற்கு முன் எட்ட முடியாத இலக்கை எல்லாம் எட்டிக் காட்டுவார் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு இன்னிங்க்ஸ்

ஒரே ஒரு இன்னிங்க்ஸ்

ரோஹித் சர்மா இனி தனக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பெற சஞ்சய் பங்கர் கூறுவது போன்ற ஒரே ஒரு இன்னிங்க்ஸ் மட்டுமே போதும். தோனி கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டது போல, இப்பவும் ஆடுங்க ஹிட்மேன்!

Story first published: Saturday, September 14, 2019, 17:24 [IST]
Other articles published on Sep 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+