Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10.5 ஓவரில் 5 விக்கெட்... மணக்க மணக்க சாப்பிட்டு வந்து வேட்டையாடிய இந்திய வீரர்.. குபீர் ரகசியம்!

Recommended Video

விக்கெட் வேட்டை நடத்திய ஷமியின் ரகசியம்..ரோஹித் சொன்ன விஷயம் | Rohit sharma about mohammed shami

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அவரது விக்கெட் வேட்டைக்கு பின் இருந்த ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் சக வீரர் ரோஹித் சர்மா.

பத்திரிக்கையாளர்கள் சிரிப்பலை

பத்திரிக்கையாளர்கள் சிரிப்பலை

மணக்க மணக்க ஒரு சூப்பர் ஐட்டத்தை சாப்பிட்டு விட்டு தான் ஷமி விக்கெட் வேட்டை ஆடினார் என்பதை நச்சென கேலியாக சொல்லி, பத்திரிகையாளர் சந்திப்பில் சிரிப்பலையை ஏற்படுத்தினார் ரோஹித் சர்மா.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி ஐந்தாம் நாள் வரை நீடித்தது. இந்திய அணி 395 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து, தென்னாப்பிரிக்க அணிக்கு சவால் விட்டது. இறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோஹித் மிரட்டல்

ரோஹித் மிரட்டல்

ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்து மிரட்டினார். 13 சிக்ஸ் அடித்து வாசிம் அக்ரமின் 23 ஆண்டு சாதனையை முறியடித்து ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பந்து வீச்சு அபாரம்

பந்து வீச்சு அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகிய மூவரும் விக்கெட் வேட்டை நடத்தினர். அஸ்வின் 8 விக்கெட்களும், ஜடேஜா 6 விக்கெட்களும் வீழ்த்தினர்.

ஷமி 5 விக்கெட்

ஷமி 5 விக்கெட்

வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை அள்ளினார். வெறும் 10.5 ஓவரில் 5 விக்கெட்கள் வீழ்த்திய அவர் இரண்டாம் இன்னிங்க்ஸ்களில் சிறப்பாக பந்து வீசுவேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

நான்கு பவுல்டு அவுட்

நான்கு பவுல்டு அவுட்

அவர் எடுத்த ஐந்து விக்கெட்களில் நான்கு விக்கெட்கள் பவுல்டு அவுட் முறையில் கிடைத்தது. ஸ்டம்ப்பை தகர்த்து அவர் எடுத்த விக்கெட்கள், அவர் எந்த அளவு துல்லியமாக பந்து வீசுகிறார் என்பதை காட்டியது.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

மேலும், இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்க்ஸில் நான்கு பவுல்டு வுட் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷமி. பும்ரா கடந்த மாதம் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை முதன்முறையாக செய்து இருந்தார்.

பத்திரிக்கையாளர் கேள்வி

பத்திரிக்கையாளர் கேள்வி

ஷமியின் இந்த மேஜிக் குறித்து பத்திரிக்கையாளர்கள் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, முகமது ஷமி ஃபிரஷ்ஷாக இருந்தால் என்ன செய்வார் என தெரியும் என்று கூறி விட்டு, அந்த ரகசியத்தை கூறி சிரிக்க வைத்தார்.

ரோஹித் என்ன சொன்னார்?

ரோஹித் என்ன சொன்னார்?

"ஷமி ஃபிரஷ் ஆக இருந்தால் என்ன செய்வார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்புறம் கொஞ்சம் பிரியாணியுடன்" என்று கூறி ஷமி பிரியாணி சாப்பிட்டு தான் விக்கெட் வேட்டை நடத்தினார் என்பதை போட்டு உடைத்தார் ரோஹித்.

பிரியாணி பிரியர்

முகமது ஷமி பிரியாணி பிரியர். முன்பு அவர் அதிக எடை இருந்ததால் போட்டிகளில் சரியாக செயல்பட முடியாமல் இருந்தார். அப்போது உணவில் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மீண்டும் போட்டிகளில் கலக்கி வருகிறார். இருந்தாலும் அந்த பிரியாணியை மட்டும் அவர் இன்னும் விடவில்லை போல..!

Story first published: Monday, October 7, 2019, 14:50 [IST]
Other articles published on Oct 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+