Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த 2 மேட்ச் ஒழுங்கா ஆடலைனா டீமை விட்டு தூக்கிருவாங்களே.. கோலியிடம் வசமாக சிக்கிய ரோஹித் சர்மா!

Recommended Video

Ind vs SA | Rohit Sharma | டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!-வீடியோ

மும்பை : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பே பயிற்சிப் போட்டியில் சொதப்பி கடும் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார் ரோஹித் சர்மா.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரன் குவிக்கவில்லை என்றால் கேப்டன் கோலி அவரை நீக்கலாம் என்ற பேச்சு அடிபடத் துவங்கி உள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முதன் முறையாக துவக்க வீரராக இடம் பெற்றார் ரோஹித் சர்மா.

காத்திருந்து பெற்ற வாய்ப்பு

காத்திருந்து பெற்ற வாய்ப்பு

2013இல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி இருந்தாலும், இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார் ரோஹித். அதிலும் ஒரு முறை கூட துவக்க வீரராக வாய்ப்பு பெறவில்லை. அப்படி நீண்ட நாள் காத்திருந்து துவக்க வீரர் வாய்ப்பை பெற்றுள்ளார் ரோஹித்.

பயிற்சிப் போட்டி சொதப்பல்

பயிற்சிப் போட்டி சொதப்பல்

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா, ரன் குவித்து தன் பேட்டிங் திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொதப்பினார் ரோஹித்.

நான்கு நிமிடங்கள்

நான்கு நிமிடங்கள்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பிலாண்டர் வீசிய பந்தில் டக் அவுட் ஆனார். வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்ற ரோஹித், இரண்டு பந்துகள் மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

சிக்கல் ஆரம்பம்

சிக்கல் ஆரம்பம்

அதனால், சிக்கலில் சிக்கிக் கொண்டு இருக்கிறார் ரோஹித் சர்மா. டெஸ்ட் தொடருக்கு முன்பே டக் அவுட் ஆகி துவக்கக் வீரராக சரியாக ஆடுவாரா? என்ற சந்தேகத்தை அவரே கிளப்பி விட்டுள்ளார்.

மூன்று போட்டிகளிலும்..

மூன்று போட்டிகளிலும்..

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் ரோஹித் சர்மா வாய்ப்பு பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல் இரு போட்டிகளில் ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் மூன்றாவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்திய அணியின் நடைமுறை

இந்திய அணியின் நடைமுறை

கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணியின் கடந்த கால முடிவுகளை வைத்துப் பார்த்தால், ரோஹித் சர்மாவுக்கு இரண்டு போட்டிகள் தான் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு முன் துவக்க வீரர்கள் தவான், முரளி விஜய், ராகுல் என பலரும் தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

ஷுப்மன் கில் காத்திருப்பு

ஷுப்மன் கில் காத்திருப்பு

மேலும், தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் ஷுப்மன் கில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்டால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால், ரோஹித் சர்மாவுக்கு மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

ப்ரித்வி ஷா வருவார்

ப்ரித்வி ஷா வருவார்

அதே போல, இந்த தொடர் முடிந்து அடுத்த டெஸ்ட் தொடரில் தற்போது தடையில் இருக்கும் ப்ரித்வி ஷா வந்து விடுவார். அப்போது துவக்க வீரர் இடத்திற்கு மேலும் போட்டி அதிகரிக்கும். அதனால், தென்னாப்பிரிக்க தொடரிலேயே ரோஹித் சதம், அரைசதம் என ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எங்கே சறுக்குகிறார் ரோஹித்?

எங்கே சறுக்குகிறார் ரோஹித்?

ரோஹித் சர்மா பயிற்சிப் போட்டியில் பந்தை தள்ள முயன்றார். அந்த பந்தை அவர் ஆடாமல் விட்டிருக்க முடியும். ஆனால், ஒருநாள் போட்டி போல, பந்தை அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய ரோஹித் ஆட்டமிழந்தார்.

விக்ரம் ரத்தோர் உதவி?

விக்ரம் ரத்தோர் உதவி?

அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ரோஹித் சர்மாவின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். அவரை வழி நடத்த வேண்டும். அனுபவ பேட்டிங் பயிற்சியாளர் ஆன விக்ரம் ரோஹித்திடம் டெஸ்ட் போட்டிக்கு தேவையான மாற்றத்தை கொண்டு வருவாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Story first published: Monday, September 30, 2019, 20:09 [IST]
Other articles published on Sep 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+