For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள்.. அந்த இந்திய வீரரால் முறியடிக்க முடியும்.. பிரையன் லாரா உறுதி!

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் 500 ரன்கள் குவித்தது எனது சாதனையை முறியடிக்கும் திறமை இந்திய அணியின் சுப்மன் கில்லிடம் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில். சிறிய வயதிலேயே இந்திய அணியின் 3 வடிவங்களுக்குமான கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு இணையான சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்துள்ளது.

IND vs SA : Shubman Gill can beat my highest individual Score record in Test cricket says West Indies Legend Brian Lara

அதற்கேற்ப டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகிறார் சுப்மன் கில். நடப்பாண்டில் மட்டும் 6 சதங்கள், 9 அரைசதங்கள் என்று மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாற்றமடைந்துள்ளதால், குஜராத் அணியின் கேப்டனாக 24 வயதிலேயே சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி எண்ணற்ற சாதனைகளை படைத்து வரும் சுப்மன் கில் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா பேசுகையில், எனது இரு பெரும் சாதனைகளை தகர்க்க கூடிய வீரராக சுப்மன் கில்லை பார்க்கிறேன். புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்களில், சுப்மன் கில் தான் சர்வதேச கிரிக்கெட்டை ஆதிக்கம் செய்யக் கூடிய வீரராக அமைந்துள்ளார். அவர் நிச்சயம் எண்ணற்ற சாதனைகளை தகர்ப்பார் என்று நிச்சயம் தெரியும்.

அண்மையில் முடிவடைந்த உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில்லால் சதம் விளாச முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே ஆடிய இன்னிங்ஸ்களை கொஞ்சம் பாருங்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான இன்னிங்ஸை என்று அசர வைக்கிறார். நிச்சயம் அடுத்தடுத்து வரும் ஐசிசி தொடர்களில் மிகச்சிறந்த ஆட்டத்தை சுப்மன் கில் விளையாடுவார் என்று தெரிவித்தார்.

கவுண்டி கிரிக்கெட்டில் 1994ஆம் ஆண்டு துர்ஹம் அணிக்கு எதிராக வார்விக்‌ஷையர் அணிக்காக ஆடிய பிரையன் லாலா 501 ரன்களை விளாசியதே இன்று வரை சாதனையாக உள்ளது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிரையன் லாரா 400 ரன்கள் அடித்ததே இன்று வரை தனி நபர் அடித்த அதிக ஸ்கோராகும். மேலும் சுப்மன் கில் அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 6, 2023, 16:36 [IST]
Other articles published on Dec 6, 2023
English summary
IND vs SA : Shubman Gill can beat my highest individual Score record in Test cricket says West Indies Legend Brian Lara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+