Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்லுக்கு புதிய பொறுப்பு.. அறிமுக வீரரை வைத்து காய் நகர்த்தும் ரோகித்

கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புத்தாண்டான ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் குழு அணியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள போகிறது.

Ind vs sa - Shubman gill might move in to 5th position in batting


அதன் முதல் முடிவாக வேகப்பந்துவீச்சாளர்கள் சர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை நீக்கிவிட்டு ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமாரை அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜடேஜா அணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது முக்கிய முடிவாக சுப்மன் கில்லை நம்பர் மூன்றாவது பேட்டிங் வரிசையில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு மாற்றலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் கில் நம்பர் மூன்றாவது பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஒரு முறை கூட 30 ரன்களை தொடவில்லை. இதனை கருத்தில் கொண்டு கில்லை பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கி விடலாம் என்றும் கூறப்படுகிறது. கில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளி வைத்தால் மூன்றாவது இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் என்ற ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ள வீரரை களம் இறக்கி வாய்ப்பு வழங்கலாம் என்ற முடிவில் ரோகித் சர்மாவும் டிராவிட்டும் இருக்கிறார்கள்.

கில் மூன்றாவது வீரராக தடுமாறுவதால் அவர் நடு வரிசையில் களமிறங்கும் போது பந்து ஸ்விங் ஆவது கொஞ்சம் நின்று இருக்கும் என்றும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கில் அதிரடியாக விளையாடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நிகழ்ந்தால் நிச்சயம் இந்திய அணியின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
Story first published: Sunday, December 31, 2023, 23:31 [IST]
Other articles published on Dec 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+