Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 74 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 74 ரன்களில் சுருண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.

இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 4 ரன்களிலும், சூரியகுமார் 12 ரன்களிலும், அபிஷேக்சர்மா 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 48 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

Ind vs sa

அப்போது திலக் வர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியின் இன்னிங்சை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழக்க, இந்திய அணி திணறியது. அப்போது களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சுளுக்கு எடுத்த அவர் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர் என 28 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்த்தார்.

இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தென்னாபிரிக்க அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குயிண்டன் டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதைப் போன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி காட்ட முயன்ற நிலையில், ஆர்ஸ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சில் 14 ரன்களில் விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் ஆனார்.

கேப்டன் மார்க்கரம் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க பிரவீஸ் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என அதிரடி காட்டினார். பிரவீஸ் 14 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து களமிறங்கிய மற்ற தென்னாப்பிரிக்கா வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். யாருமே நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கவில்லை .இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர்.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 12.3 ஓவரில் 74 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 101 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 5 டி20 பெற்றுக் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலையில் உள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி எடுத்திருக்கும் மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.

Story first published: Tuesday, December 9, 2025, 22:19 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+