For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீங்க.. இதை கூடவா செய்ய முடியாது.. தென்னாப்பிரிக்காவை வெளுத்த கவாஸ்கர்!

டர்பன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் டி20 தொடர் தொடங்கியுள்ளது. டர்பன் மைதானத்தில் நேற்று நடக்கவிருந்த முதல் டி20 போட்டி டாஸ் கூட போடப்படாமல் கனமழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன.

IND vs SA : Sunil Gavaskar upsets with South Africa Cricket Board due to the first T20 Match Called off due to Rain

இதனால் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் பலரும் நீண்ட நேரம் மழை நிற்கும் என்று காத்திருந்தனர். ஆனால் கடைசி வரை மழை தொடர்ந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளும் பாதிக்கப்படுமோ என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விளாசி தள்ளியுள்ளார். நேற்றைய போட்டியின் போது சுனில் கவாஸ்கர் பேசுகையில், தென்னாப்பிரிக்காவின் டர்பன் மைதானம் மழை பெய்த போது வெறும் பிட்ச் மற்றும் 30 யார்ட் வளையம் மட்டுமே தார்பாய் மூலமாக மூடப்பட்டிருந்தது. இப்படியிருந்தால், ஆட்டம் கைவிடப்பட வேண்டிய நிலைதான் வரும். ஒவ்வொரு கிரிக்கெட் சங்கங்களும் அதிக வருவாய் ஈட்டுகிறார்கள். அதனால் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது மைதானத்தை முழுமையாக மூடாததன் காரணமாக, ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் பல்வேறு அணிகளும் புள்ளிகளை இழக்க நேரிட்டது. அதில் தென்னாப்பிரிக்காவும் ஒரு அணி தான். இந்தியாவில் உள்ள கொல்கத்தா மைதானத்தில் மழை பெய்தால், ஒட்டுமொத்த மைதானமும் தார்பாய் மூலம் மூடப்படும்.

அது சவுரவ் கங்குலி எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட விளைவு. ஒருமுறை மழை காரணமாக டெஸ்ட் போட்டியில் பிரச்சனையை சந்திக்க நேரிட்ட போது, கங்குலி உடனடியாக இதனை செயல்படுத்தினார். அதன்பின் தவறுகள் ஒருமுறை கூட நடவடிக்கை. ஆசிய கோப்பையின் போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் அப்படிதான் சிறப்பாக செயல்பட்டன என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 11, 2023, 8:04 [IST]
Other articles published on Dec 11, 2023
English summary
IND vs SA - Indian Legendary Cricketer Sunil Gavaskar upsets with South Africa Cricket Board due to the first T20 Match Called off due to Rain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+