
ப்ளேயிங் 11 என்ன
இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூழலில் ப்ளேயிங் 11 கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். மற்றொரு ஓப்பனராக இளம் வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

ஒதுக்கப்பட்ட கெயிக்வாட்
இதற்கு முந்தைய 2 தொடர்களிலும் ருதுராஜ் கெயிக்வாட் ஒதுக்கப்பட்டு தான் வந்தார். அவரை விட இஷானுக்கே முன்னுரை தரப்பட்டது. தொடர் முழுவதும் இஷான் கிஷான் களமிறங்கினால் ருதுராஜ் கெயிக்வாட்டுக்கு கடைசி ஒரு போட்டியில் வாய்ப்பு தரப்படும். அதுவும் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் தான் வாய்ப்பு தரப்பட்டது. அந்தவகையில் இந்த முறையும் இஷான் தான் களமிறங்கவுள்ளார்.

திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. தொடைப்பகுதியில் நல்ல காயம் உள்ளதால், தொடரில் இருந்தே வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாற்று வீரர்கள்
தற்போது ஓப்பனிங்கில் எந்தவித போட்டியும் இன்றி ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கலாம். ஒருபுறம் இஷான் கிஷான் மற்றொருபுறம் ருதுராஜ் கெயிக்வாட் என அதிரடி ஓப்பனிங் வரவுள்ளது. ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்தார். ருதுராஜ் கெயிக்வாட் 14 போட்டிகளில் 368 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











