163 கிமீ வேகத்தில் வீசியும் வாய்ப்பு இல்லை.. உம்ரான் மாலிக் குறித்து டிராவிட் சூசகம்.. காரணம் என்ன??
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக உள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி நாளை முதல் ( ஜூன் 9 ) 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.
முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

முதல் டி20 போட்டி
இதற்கான இந்திய அணி வீரர்கள் படு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழலில் ப்ளேயிங் 11 ல் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்றிருக்க கூடியவர் உம்ரான் மாலிக். ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 150+ கிமீ வேகத்தில் பவுலிங் வீசி அசத்தினார். இதனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய வேகம்
இதற்கேற்றார் போலவே இன்று பிரமாண்ட ரெக்கார்ட்டை நோக்கி அடி எடுத்து வைத்தார். அதாவது பயிற்சியின் போது உம்ரான் மாலிக் 163.7 கிமீ. வேகத்தில் பந்துவீசி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்க அணியை சமாளிக்க நிச்சயம் உம்ரான் மாலிக் தேவைப்படுகிறார். இந்நிலையில் தான் அவர் விளையாடுவாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது.

டிராவிட்
இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், உம்ரான் இளம் வீரர், அவர் தற்போது தான் மேம்படுத்திக்கொண்டு வருகிறார். அவர் எவ்வளவு அதிகமாக ஆடுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக வருவார். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பாக இருப்பது தான் முக்கியம். அவருக்கு தேவையான அவகாசம் கொடுக்க வேண்டும்.

என்ன காரணம்
உம்ரான் மாலிக் நிறைய மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அணியில் ஏற்கனவே அனுபவ வீரர்களான ஹர்ஷல், புவனேஷ்வர், ஆவேஷ் கான் உள்ளனர். ஒரு கலவையான அணியாக தான் உருவாக்க வேண்டும். எனவே சற்று யோசித்து தான் முடிவெடுப்போம் எனக் கூறினார். உம்ரானுக்கு வாய்ப்புள்ளதா என்றும் பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications