For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2024ல் 3 ஒருநாள் போட்டிகள் தான்.. இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ.. இனி என்ன நடக்குமோ!

சென்னை: 2024ஆம் ஆண்டில் இந்திய அணி தரப்பில் மொத்தமாகவே 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு இந்திய அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் மற்றும் போட்டிகள் தொடர்பான அட்டவணை முடிவாகியுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, ஆஃப்கானிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

IND vs SA TEST : BCCI Scheduled only 3 Matches in ODI Format for the Indian team players in the 2023

இந்த தொடருக்கான நாட்கள் மற்றும் தேதிகள் முடிவாகி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரை உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய கோப்பை ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்றது.

இந்த நிலையில் 2024ல் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ள சூழலில் அதற்கு தயாராகும் வகையில் டி20 தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான டெஸ்ட் தொடருக்கான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தப்பட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த ஆண்டில் வெறும் 3 போட்டிகளில் மட்டும் இந்திய அணி விளையாடவுள்ளது. ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டின் எழுச்சியால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவு பாதைக்கு தள்ளப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை மூலமாக புத்துயிர் பெற்றது. ஆனால் தற்போது இந்திய அணி வீரர்களே ஒருநாள் போட்டிகளை விளையாட ஆர்வம் காட்டாததால், வரும் நாட்களில் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்கள் மட்டுமே 50 ஓவர்கள் போட்டிகளாக நடக்கும் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. அதேபோல் டி20 போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆடாத சூழலில், இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 1, 2024, 14:44 [IST]
Other articles published on Jan 1, 2024
English summary
IND vs SA TEST : BCCI Scheduled only 3 Matches in ODI Format for the Indian team players in the 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+