Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“SENA களங்களில் கிங் மேக்கர்”.. கே.எல்.ராகுல் படைத்த அசத்தல் சாதனை.. சச்சினால் கூட செய்ய முடியவில்லை

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் அடித்த சதம் மூலம் மிகப்பெரும் பெருமை ஒன்றை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

Recommended Video

KL Rahulன் SENA சாதனை! South Africaவுக்கு எதிரான அசத்தல் Century | IND vs SA | OneIndia Tamil

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு தலைவலி கொடுத்து வருகிறது.

அசத்தல் சதம்

அசத்தல் சதம்

இந்திய அணியின் வழக்கமான ஓப்பனர் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறியதால் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். மேலும் கே.எல்.ராகுலுக்கு துணைக்கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அதனை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். காயம் காரணமாக கே.எல்.ராகுல் ஓய்விற்கு செல்கின்ற போதும், தரமான ஃபார்மோடு தான் எப்போதும் கம்பேக் கொடுக்கிறார்.

அதிகரித்த எண்ணிக்கை

அதிகரித்த எண்ணிக்கை

தென்னாப்பிரிக்க களத்தில் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வது சாதாரண காரியம் அல்ல. ஆனால் கே.எல்.ராகுல் தனது கிளாசிக் ஆட்டத்தால் சதமடித்து அசத்தியுள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் அவர் 122 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். சர்வதேச டெஸ்டில் அவர் அடிக்கும் 7வது சதம் இதுவாகும். இவற்றில் 4 சதங்கள் அயல்நாட்டு களங்களில் ஆகும். அதுவும் 'SENA' சேனா களங்களில்.

SENA என்பது என்ன?

SENA என்பது என்ன?

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா களங்களை தான் SENA என்றழைப்பார்கள். பொதுவாக இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் அதிரடி காட்டினாலும், அயல்நாட்டு களங்களில் திணறுவார்கள். அதற்கு உதாரணம் ரோகித் சர்மா. இந்தியாவில் மட்டும் தான் அவரின் பாட்ஷா பலிக்கும் என விமர்சனங்கள் உண்டு. விராட் கோலி போன்ற வீரர்கள் கூட ஏதேனும் ஒரு சில அயல்நாட்டு மண்களில் தான் சிறப்பாக செயல்படுகிறார்.

அசத்தல் சாதனை

அசத்தல் சாதனை

இந்நிலையில் கே.எல்.ராகுல் அயல்நாட்டு களங்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு வரை இங்கிலாந்தில் 2 சதங்கள், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் என அசத்தியிருந்தார். தற்போது தென்னாப்பிரிக்காவில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க, ஆஸ்திரேலிய களங்களில் சதமடித்த முதல் இந்திய ஓப்பனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அவர் இன்னும் நியூசிலாந்து மண்ணில் மட்டும் சதமடித்துவிட்டால், SENA களங்கள் அனைத்திலும் சதமடித்த முதல் இந்திய ஓப்பனிங் வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார். தற்போது துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் அவரிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து விரைவிலேயே அந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, December 27, 2021, 18:07 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+