Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA : நீயெல்லாம் மனுஷனா.. பயிற்சியில் அஸ்வின் வீசிய பந்து.. பளாரென சிக்சர் அடித்த விராட் கோலி!

கேப் டவுன்: இந்திய அணியின் வீரர்களின் வலைப்பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தை விராட் கோலி டவுன் தி ட்ராக் இறங்கி வந்து சிக்சர் விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் 2வது டெஸ்ட் போட்டியில் கட்டாயமாக இந்திய அணி வெற்றபெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

IND vs SA TEST : Virat Kohli hits a six against Tamilnadu Player Ravichandran Ashwin during the Net practice ahead of the Capetown test

இந்த நிலையில் இன்று காலை இந்திய அணி சென்சுரியனில் இருந்து கேப் டவுன் மைதானத்திற்கு வந்து தரையிறங்கியது. புத்தாண்டு அன்று பயணம் மேற்கொண்டதோடு, இந்திய அணி வீரர்கள் எந்த விடுப்பும் எடுத்து கொள்ளாமல் பயிற்சியை மேற்கொண்டனர். கேப் டவுன் மைதானத்தில் இந்திய அணி விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா உட்பட அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பயிற்சியின் போது விராட் கோலிக்கு இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்துவீசினர். அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவும் விராட் கோலி பயிற்சி மேற்கொண்டார். அதில் முதல் டெஸ்ட் போட்டியில் எப்படி க்ரீஸில் இருந்து சில மீட்டர் தூரம் முன் நின்று பந்தை எதிர்கொண்டாரோ, அதேபோல் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அஸ்வின் வீசிய ஒரு பந்தை சரியாக டவுன் தி டிராக் இறங்கி வந்து தலைக்கு மேல் சிக்சர் அடித்து அசத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அஸ்வின் பந்தில் விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்த ஷாட்கள் சில வாரங்களுக்கு முன் ட்ரெண்டாகின.

அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அஸ்வினின் பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம் விராட் கோலி எப்படியான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் 38 மற்றும் 76 ரன்களை இரு இன்னிங்ஸ்களிலும் விளாசினார். தென்னாப்பிரிக்கா மண்ணில் ஏற்கனவே 2 சதங்களை விராட் கோலி விளாசியுள்ள நிலையில், 2வது டெஸ்டில் நிச்சயம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 1, 2024, 16:02 [IST]
Other articles published on Jan 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+