Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: கோரிக்கை வைத்த அகர்கர்.. நிராகரித்த விராட் கோலி, ரோகித் சர்மா.. என்ன நடந்தது?

மும்பை: தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் தொடர் நவம்பர் 13, 16 மற்றும் நவம்பர் 19ஆம் தேதிகளில் ராஜ்கோட் இல் நடைபெறுகிறது.

இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரின் பெயரும் இந்த அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி ஓய்வு பெற்றுவிட்டது.

Virat Kohli and Rohit sharma

தற்போது வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடுகிறார்கள். கடந்த ஐபிஎல் தொடருக்குபின் இருவரும் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடினர். இதில் ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதமும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமும் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

விராட் கோலி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்தார். இதன் காரணமாக இருவரும் அதிக அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது அது நல்ல பயிற்சியாக அமையும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி தொடரில் விளையாட வருமாறு தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த விராட் கோலி, ரோகித் சர்மா, இது இளம் வீரர்களுக்கான தொடர் என்றும் அவர்களுடைய இடத்தை நாங்கள் பறிக்க விரும்பவில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பதால் இந்த பயிற்சி தேவை இல்லை என இருவரும் மறுத்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி தொடரில் திலக் வர்மா கேப்டன் ஆகவும் ருதுராஜ் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இஷான் கிஷன், கலீல் அகமத், ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிராப்சிம்ரன் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.

Story first published: Wednesday, November 5, 2025, 19:41 [IST]
Other articles published on Nov 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+