Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுவாங்கனு நல்லா தெரியும்.. கெத்து காட்டிய டெம்பா பவுமா!

கொல்கத்தா: இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை நன்றாக அறிவோம் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். என்னுடைய பேட்டிங் பற்றிய புரிதல் தனக்கு இருப்பதாக கூறிய அவர், பேட்டிங் டெக்னிக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு பவுமா முக்கிய காரணாமாக அமைந்தார்.

IND vs SA

இந்த வெற்றிக்கு பின் கேப்டன் டெம்பா பவுமா பேசுகையில், இதுபோன்ற போட்டிகளில் முடிவு நம் பக்கம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பேட்டிங்கின் போது முடிந்த அளவிற்கு மைதானத்தில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கணக்காக இருந்தது. இந்த பிட்சில் பேட்டிங் சவாலாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தோம். எங்களால் பேட்டிங் ஆடவே முடியவில்லை.

ஆனால் பிட்சில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பிவோம். அதனை தென்னாப்பிரிக்கா அணி சரியாக பயன்படுத்தி கொண்டது. எங்களின் சில திட்டங்கள் சரியாக எடுபட்டது. இன்று காலை பாஸ்ச் மற்றும் மார்கோ யான்சனுடன் ஆடிய ஆட்டம் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. அதேபோல் 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும் போது, நம்பிக்கையுடன் இருக்க முடியாது.

அதனை வின்னிங் ஸ்கோராக கருத வாய்ப்பே இல்லை. ஆனாலும் நாங்கள் நம்பினோம். சில நேரங்களில் வீரர்களால் மேஜிக்கை நிகழ்த்த முடியும். ஒரு பேட்ஸ்மேனாக எங்கள் வீரர்களுக்கு சில மோசமான தரவுகளை கொடுத்தேன். அதேபோல் எனது பேட்டிங் டெக்னிக்கால் எனக்கு நம்பிக்கையாக உள்ளது. எனது ஆட்டம் குறித்தும் நல்ல புரிதல் உள்ளது.

இந்தியா வரும் போது சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்றே நினைத்திருந்தேன். இந்த மண்ணில் பெரிய ரெக்கார்ட்ஸ் எனக்கு இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு இந்திய பிட்ச்க்கு ஏற்ப தகவமைத்து கொண்டேன். அதேபோல் எங்கள் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்பட்டது. சைமன் ஹார்மர் மற்றும் மஹாராஜ் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் பவுலிங் செய்து வருகின்றனர்.

அவர்கள் இருவரால் எங்களின் பவுலிங் இன்னும் வலிமையாக உள்ளது. அக்சர் படேலுக்கு பிடித்த கேட்ச் கொஞ்சம் கடினமானது. அந்த நேரத்தில் அக்சர் படேல் நல்ல ஃபார்மில் காணப்பட்டார். அதேபோல் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதையும் நன்றாக அறிவோம். இந்த வெற்றியால் மகிழ்ச்சி.. இப்படியான நேரங்களில் அணியின் அங்கமாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 16, 2025, 16:00 [IST]
Other articles published on Nov 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+