Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - இந்திய ஒருநாள் அணியில் 22 வயது வீரர் அறிமுகமாக வாய்ப்பு! கம்பீர் எடுத்த கம்பீரமான முடிவு

கொழும்பு : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 22 வயது வீரரான ரியான் பராக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 22 வயதான ரியான் பராக் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றார்.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் ரியான் பராக், ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கும் ரியான் பராக் பந்து வீச்சிலும் அபாரமாக செயல்படுகிறார்.

ind vs sl Virat kohli Rohit sharma KL Rahul

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் விளையாடி வருகிறார். திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் தனது வாய்ப்பேச்சால் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் வீரராக இருக்கின்றார். இந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் ஆல்ரவுண்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் பந்து வீச தெரிந்தால் அவர்களுக்கு அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற கொள்கையில் கம்பீர் இருக்கின்றார். இதன் காரணமாக டி20 தொடரில் தன்னுடைய திறமையை நிரூபித்த ரியான் பராக்கிற்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்க கௌதம் தம்பி முடிவெடுத்திருக்கிறார்.

கில், ரியான் பராக், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் எல்லாம் ஒரே அண்டர் 19 அணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் தற்போது இருந்து இவர்களுக்கு வாய்ப்பு வழங்கி எதிர்கால அணியை கட்டமைக்க வேண்டும் என கம்பீர் நினைக்கின்றார். இதன் காரணமாக கொழும்புவில் இன்று தொடங்க உள்ள முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டு கே எல் ராகுலுக்கு அணியின் இடம் கிடைக்காது என தெரிகிறது.

இல்லை ராகுல் அணியில் இருந்தால் ஸ்ரேயாசின் இடம் கேள்விக்குறியாகும் என தெரிகிறது. பந்து வீசு தெரிந்த ரியான் பராக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏதேனும் ஒரு அனுபவ வீரர் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரியான் பராக் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Friday, August 2, 2024, 8:11 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+