
நடுவரிசை
இந்திய அணியில் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்று 3வது வீரராக ஹனுமா விஹாரிக்கும், 5வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோலியை தவிர முற்றிலும் நடுவரிசை வீரர்களை கொண்ட அணியை களிமிறக்கப்பட்டுள்ளது.

அனுபவ வீரர்கள்
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு புஜாரா, ரஹானே இல்லாமல் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் களமிறங்கியது. இதன் மூலம் இந்திய அணி புதிய மாற்றத்திற்கு தயாராகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி ஊக்கம் அளிப்பது முக்கியம் என்றார்.

மாற்றம்
அதே போன்று, புஜாரா, ரஹானே ஆகியோரின் எதிர்காலத்திற்கு முற்றுப் புள்ளி இல்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் ரோகித் சர்மா கூறினார். ரோகித் சர்மா இப்படி சொன்னாலும், இது மாற்றத்திற்கான முதல் புள்ளியாக பார்க்கப்படுகிறது.

ஊதியம்
இதனை உறுதிப்படுத்தும் விதமாக புஜாரா, ரஹானே ஆகியோரின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ, 3 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. ஹனுமா விஹாரிக்கு ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்தியா எப்படி விளையாடுகிறது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











