Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலி போல் சிக்கிய ரோகித்.. கேப்டனாக முதல் டெஸ்டில் சோகம்.. வசமாக பிளான் போட்ட இலங்கை

மொஹாலி: இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரோகித் சர்மா முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பதவியேற்றார். பிளேயிங் லெவனில் சரியான வீரர்களை தேர்வு செய்தார்.

சுப்மான் கில்லுக்கு பதிலாக ஹனுமா விஹாரியை தேர்வு செய்தது சரியான முடிவு என்று கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்தனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது, காரணம் இலங்கை அணி வீரர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச, அதனை அல்வா போல் ரோகித் சர்மாவும், மாயங் அகர்வாலும் ரன்களை விளாசினர்.

6 பவுண்டரிகள்

6 பவுண்டரிகள்

குறிப்பாக ரோகித் சர்மா 6 பவுண்டரிகளை விளாசினார். இதனால் கேப்டனாக முதல் போட்டியில் ரோகித் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , இலங்கை அணி வீரர்கள் பொறியை வைத்து எலியை பிடிப்பது போல் ரோகித் சர்மாவை லாவகமாக பிடித்தனர்.

சிக்கிய ரோகித்

சிக்கிய ரோகித்

லாகிரு குமாரா வீசிய 10வது ஓவரில் , ரோகித் சர்மா தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார். 2 பந்துகளையும் ஷாட் பாலாக வீசினார் லாகிரு குமாரா, இதனையடுத்து, அதே ஓவரில் நல்ல ஷாட் பாலாக வீச, ரோகித் சர்மா அதனை புல் ஷாட் அடிக்க, பவுண்டரி லைனில் நின்ற வீரரிடம் பிடிப்பட்டார்.

சதம் மிஸ்

சதம் மிஸ்

இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு ஷாட் பால் போட்டு அவருக்கு ஆசைக் காட்டி வசமாக சிக்க வைத்தனர் இலங்கை வீரர்கள். இதன் மூலம் 28 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனை மட்டும் ரோகித் சர்மா, தப்பி இருந்தால் நிச்சயம் சதம் விளாசி அசத்திருப்பார். ரோகித் விக்கெட்டை பார்த்தாவது மற்ற இந்திய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்.

Story first published: Friday, March 4, 2022, 12:24 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+