இரண்டு முறை அவுட்டான இலங்கை வீரர்.. ஜடேஜா ஓவரில் நடந்த சுவாரஸ்யம்.. விக்கெட்டுக்காக இந்தியா தீவிரம்
மொஹாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
Recommended Video
முதல் இன்னிங்சில் இந்திய அணி 574 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
ஆடுகளம், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படவில்லை. இதனால் ரோகித் சர்மா உடனடியாக சுழற்பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைத்தார்.

அஸ்வின் விக்கெட்
முதலில் பந்து மைதானத்தில் பெரிய அளவில் திரும்பவில்லை. இதனால் இலங்கை அணி வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடினர். இதனையடுத்து, அஸ்வின் சரியான கோட்டில் பந்துவீச தொடங்கினார். தொடர்ந்து ஸ்டம்பை நோக்கி அஸ்வின் பந்துவீச, திரிமானே பேட்டால் தடுக்காமல் விட எல்.பி. டபிள்யூ ஆனார்.

முதல் அவுட்
இதனையடுத்து, ஜடேஜா பந்துவீச தொடங்கினார். அப்போது 24வது ஓவரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. இலங்கை கேப்டன் கருணரத்னேவுக்கு ஜடேஜா பந்துவீச, அது off side லிருந்து Turn ஆகி கருணரத்னேவின் காலில் பட்டது. இதற்கு நடுவர்கள் அவுட் தரவில்லை. இதற்கு மூன்றாம் நடுவரை நாடலாமா வேண்டாமா என்று யோசித்த இந்திய வீரர்கள், டிஆர்எஸ் கேட்காமல் விட்டனர்.

2வது முறை அவுட்
ஆனால் ரீப்ளேவில் இது அவுட் என தெரியவந்தது. இந்த பிட்ச்சில் விக்கெட் எடுப்பதே கஷ்டம் ஆனால் இந்தியா கோட்டை விட்டதே என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அடுத்த பந்திலேயே மீண்டும் அதே போன்ற பந்தை ஜடேஜா வீச, அதற்கு நடுவர் அவுட் கொடுத்தார். உடனே கருணரத்னே நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார்

நிம்மதி
இதனையடுத்து மறு ஆய்வில், இது அவுட் தான் என தெரியவந்தது. இதனால் இந்திய வீரர்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து 2 பந்திலும் இலங்கை வீரர் அவுட்டான சுவராஸ்ய நிகழ்வு மொஹாலியில் நடைபெற்றது. இலங்கை அணியை விரைவில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய வீரர்கள் பந்துவீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications