Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா வைத்த பஞ்ச்.. 174 ரன்களில் சுருண்ட இலங்கை... ஃபாலோ ஆனை பெற்றது இலங்கை

மொஹாலி: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ ஆனை பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3ஆம் நாள் ஆட்டநேர தொடக்கத்தில் இலங்கை அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை தொடங்கியது.

யுத்தி மாற்றம்

யுத்தி மாற்றம்

அஸ்வின் கபில்தேவின் சாதனையை முறியடிக்கும் உத்வேகத்துடன் பந்துவீசினார். ஆனால், இலங்கை வீரர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். இதனையடுத்து, ஒரு பக்கத்தில் வேகப்பந்து, மறு பக்கத்தில் ஜடேஜா என ரோகித் சர்மா யுத்தியை மாற்றினார்.

இலங்கை திணறல்

இலங்கை திணறல்

அசலங்கா 29 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் அவுட் தர மறுத்த ரோகித் கடைசி நேரத்தில் ரிவியூ கேட்டு விக்கெட்டை சாய்த்தார். இதன் பின்னர் ஜடேஜா துல்லியமாக பந்துவீச, இலங்கை வீரர்கள் ரன் சேர்க்க திணறினர்.

ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

இதனையடுத்து ஆட்டத்தின் 61வது ஓவரில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திக்வெல்லா 2 ரன்களிலும், லக்மல் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதன் பின்னர் முகமது ஷமி எம்புல்தேனியாவுக்கு ஒரு ஷாட் பாலை வீச அதனை அவர் எதிர்கொள்ள முடியாமல் டக் அவுட் ஆனார்.

174 ரன்களில் சுருண்டது

174 ரன்களில் சுருண்டது

பின்னர், மீண்டும் ஜடேஜா தனது மாயாஜால சுழலால் விஸ்வா ஃபெர்னான்டோ டக் அவுட்டாகினர். இதன் பின்னர் லகிரா குமாராவும் ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட்டாகினார். இதன் மூலம் இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் பின்னர் 400 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்றது.

Story first published: Sunday, March 6, 2022, 15:44 [IST]
Other articles published on Mar 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+