Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து ஆட்டமிழந்த இலங்கை வீரர்கள்.. வலுவான நிலையில் இந்தியா.. தடுமாறும் லங்கன் லயன்ஸ்

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்தது.

357 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற இலக்குடன் இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் பேட்டிங் செய்ய தொடங்கினர்.

ஜடேஜா அபாரம்

ஜடேஜா அபாரம்

இலங்கை பந்துவீச்சாளர்களை தங்களது பேட்டிங் மூலம் ஜடேஜா, அஸ்வின் ஜோடி தண்டித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணற, அஸ்வின் அரைசதம் கடந்தார். பொறுப்புடன் விளையாடிய அஸ்வின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா, 160 பந்துகளில் தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஜடேஜா வழக்கம் போல் தனது பேட்டை சுழற்றி கொண்டாடினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

அத்துடன் ஜடேஜா நிற்கவில்லை. இதன் பின்னர் தான் அதிரடியை பறக்கவிட்டார். குறிப்பாக ஜடேஜா, முகமது ஜோடி 50 ரன்களை சேர்த்தது. இதில் அடிக்கப்பட்ட 50 ரன்களும் ஜடேஜா சேர்த்தது. சிக்சர்களாக ஜடேஜா விளாச, 175 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

அஸ்வின் விக்கெட்

அஸ்வின் விக்கெட்

இதனையடுத்து இலங்கை அணி களமிறங்கியது. வேகப்பந்துவீச்சு மைதானத்தில் எடுப்படவில்லை. இதனையடுத்து 5வது ஓவரே அஸ்வின் பந்துவீச தொடங்கினார். பந்தும் பெரிய அளவில் திரும்பவில்லை. இதனால் இலங்கை அணி வீரர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடினர். இதனையடுத்து, அஸ்வின் சரியான கோட்டில் பந்துவீச தொடங்கினார். தொடர்ந்து ஸ்டம்பை நோக்கி அஸ்வின் பந்துவீச, திரிமானே பேட்டால் தடுக்காமல் 17 ரன்களில் எல்.பி. டபிள்யூ ஆனார்.

கேப்டன் அவுட்

கேப்டன் அவுட்

இதனையடுத்து, ஜடேஜா பந்துவீச தொடங்கினார். அப்போது 24வது ஓவரில். இலங்கை கேப்டன் கருணரத்னேவுக்கு ஜடேஜா பந்துவீச, அது off side லிருந்து Turn ஆகி கருணரத்னேவின் காலில் பட்டு எல்.பி. டபிள்யூ ஆனார். இதன் பின்னர் நட்சத்திர வீரர் மேத்தியூஸ் பும்ரா பந்துவீச்சில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தனஜெயா டி சில்வா 1 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேற, இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 108 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

Story first published: Saturday, March 5, 2022, 17:56 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+