Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - 2வது ஒருநாள் போட்டியிலும் கடைசி 10 ஓவரில் தடுமாறிய இந்தியா.. வேலையை காட்டிய இலங்கை வீரர்

கொழும்பு : இந்திய அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடைசி பத்து ஓவரின் அபாரமாக விளையாடி கௌரவமான இலக்கை எட்டியது. இந்தியாவின் டெத் பவுலிங்கில் பும்ரா இல்லாமல் தடுமாறி வருவதையே இது காட்டுகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி இன்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை எடுத்து ஆட்டத்தின் முதல் பந்திலே இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நிஷாங்கா சிராஜ் பந்துவீச்சில் கோல்டன் டக் ஆனார். இதனை எடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் குஷல் மெண்டிஸ் ஜோடி பொறுப்பாக விளையாடிய அணியை சரிவில் இருந்து மீட்டது.

ind vs sl shubman gill Virat kohli Rohit sharma

அவிஷ்கா பெர்னாண்டோ 40 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 30 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து நடு வரிசையில் கேப்டன் அசலங்கா உரிமையாக விளையாடி 25 ரன்கள் எடுத்த நிலையில் சமர விக்ரமா 14 ரன்களிலும் ஜனித் லியாங்கே 12 ரன்களிலும் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனால் இலங்கை அணி 200 ரன்கள் கூட எடுக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை அணியின் கீழ் வரிசை வீரர்கள் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்த துணித் வெல்லாலகே இன்று ஆட்டத்தில் 35 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.

இதேபோன்று கமிண்டு மெண்டிஸ் 44 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அகிலா தனஞ்ஜெயா 15 ரன்கள் சேர்க்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தது. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 79 ரன்களை சேர்த்தது.

இந்தியா 40 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்ட நிலையில் கடைசி மூன்று விக்கெட்டுகளை எடுக்க தடுமாறியது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் இந்த இலக்கை தொடவே இந்தியா சிரமப்பட்டு நிலையில், தற்போது அதைவிட இலங்கை அணி கூடுதலாக அடித்திருக்கிறது. இதனால் இந்தியாவின் சேசிங் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை தரலாம்.

Story first published: Sunday, August 4, 2024, 18:59 [IST]
Other articles published on Aug 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+