Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி.. முதல்ல நாங்க சொல்றதை பண்ணுங்க.. இம்சை கொடுத்த அந்த “குழு”.. கடுப்பான பும்ரா!

மும்பை : இந்திய தேர்வுக் குழு, காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ராவை உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபியில் ஆடுமாறு கூறி உள்ளது.

இன்னும் சில தினங்களில் இலங்கை டி20 தொடரில் ஆட இருக்கும் நிலையில், பும்ராவுக்கு இது தேவையற்ற பரிசோதனையாகவே கருதப்படுகிறது.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

டி20 தொடருக்கு முன் டெஸ்ட் போட்டி சூழ்நிலையில் பந்து வீசுவதை பும்ரா விரும்பவில்லை எனத் தெரிகிறது. மேலும், பும்ராவை அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய குஜராத் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழு சொன்ன சில விதிமுறைகளில் விருப்பம் இல்லாத நிலை இருந்துள்ளது.

பும்ரா காயம்

பும்ரா காயம்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் பும்ராவுக்கு முதுகில் உள்காயம் ஏற்பட்டது. அதற்காக இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்ற பும்ரா, பின்னர் இந்தியா திரும்பி உடற்பயிற்சிகள் மூலம் மீண்டும் கிரிக்கெட் ஆட தயாராகி வந்தார்.

பும்ராவை சுற்றிய சர்ச்சைகள்

பும்ராவை சுற்றிய சர்ச்சைகள்

இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் சிகிச்சை மற்றும் உடற்தகுதி பயிற்சிகள் செய்ய வேண்டும். ஆனால், பும்ரா சிகிச்சைக்கு இங்கிலாந்து சென்றார். பின் தனிப்பட்ட முறையில் ஒரு உடற்பயிற்சி நிபுணரை நியமித்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். அது சர்ச்சை ஆனது.

உடற்தகுதி பரிசோதனை

உடற்தகுதி பரிசோதனை

இந்த நிலையில், அவர் விளையாட முழுமையாக தயாரான நிலையில், பும்ரா உடற்தகுதி பெற்று விட்டார் என பரிசோதித்து ஒப்புதல் வழங்க தேசிய கிரிக்கெட் அகாடமி மறுத்தது.

டி20 தொடரில் பும்ரா

டி20 தொடரில் பும்ரா

இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமி ஒப்புதல் பெறாத நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பெற்றார் பும்ரா.

தேர்வுக் குழு முடிவு

தேர்வுக் குழு முடிவு

இந்திய அணியில் மீண்டும் பும்ராவை தேர்வு செய்து விட்ட நிலையிலும், பும்ராவை உள்ளூர் போட்டியில் ஆடுமாறு கேட்டுக் கொண்டது தேர்வுக் குழு. தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி ட்ராபி தொடரில் அவரை கேரளா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

அந்த விதிமுறை

அந்த விதிமுறை

அதே போல, குஜராத் அணி நிர்வாகத்திடம் பும்ராவை கேரளா அணிக்கு எதிரான போட்டியில் ஆட வைக்குமாறும், ஒரு நாளைக்கு அவர் நான்கு முதல் எட்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளது தேர்வுக் குழு.

குஜராத் அணி என்ன நினைக்கிறது?

குஜராத் அணி என்ன நினைக்கிறது?

ஒரு பந்துவீச்சாளரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்து அவரை ஒரு நாளைக்கு எட்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீசச் செய்தால் அது அணிக்கு பாதிப்பாகவே அமையும் என குஜராத் அணி நிர்வாகம் நினைக்கிறது.

பும்ரா நிலை

பும்ரா நிலை

மற்ற முக்கிய வீரர்களுக்கு இது போன்ற கட்டாயங்கள் இல்லாத நிலையில், பும்ராவுக்கு திடீரென இது போன்ற கட்டாய விதிகள் ஏன் விதிக்கப்படுகின்றன? என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா டி20 தொடருக்கு முன் டெஸ்ட் போட்டியில் ஆடினால் அது பாதிப்பாக அமையும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, December 25, 2019, 11:24 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+