For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 சதம்.. சச்சின், சங்ககாரா உலகக்கோப்பை ரெக்கார்டுகளை உடைத்து எறிந்த “ஹிட்மேன்” ரோஹித் சர்மா!

Recommended Video

சச்சின், சங்ககாரா சாதனைகளை உடைத்து எறிந்த ரோஹித் சர்மா!

லீட்ஸ் : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து உலகக்கோப்பை சாதனைகளை அடித்து நொறுக்கினார்.

ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து மிரள வைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார் ரோஹித் சர்மா.

இலங்கை போட்டியில் சதம்

இலங்கை போட்டியில் சதம்

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடினார். துவக்க வீரர் ராகுலும், ரோஹித் சர்மாவும் இணைந்து 189 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். ரோஹித் சர்மா சதம் கடந்து 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஐந்தாவது சதம்

ஐந்தாவது சதம்

இது 2019 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் ஐந்தாவது சதம் ஆகும். முன்னதாக தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக சதம் அடித்து இருந்தார் ரோஹித்.

சங்ககாரா சாதனை

சங்ககாரா சாதனை

ஒரே உலகக்கோப்பை தொடரில் நான்கு சதம் அடித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா செய்து இருந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். 2015 உலகக்கோப்பை தொடரில் சங்ககாரா நான்கு சதம் அடித்து இருந்தார். தற்போது ரோஹித் சர்மா ஒரே உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதம் அடித்து உள்ளார்.

சச்சின் சாதனை சமன்

சச்சின் சாதனை சமன்

மேலும், ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடர்களில் சதைக் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் ஆறு சதங்களுடன் முதல் இடத்தில் இருந்தார். அவருடன் ரோஹித் சர்மாவும் இணைந்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ரோஹித் 2015 உலகக்கோப்பை தொடரில் ஒரு சதமும், 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்களும் எடுத்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

மேலும், 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் 606 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அவரை பின் தள்ளி ரோஹித் சர்மா தற்போது 647 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் 600 ரன்களுக்கும் மேல் குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Story first published: Saturday, July 6, 2019, 22:22 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
IND vs SL Cricket World cup 2019 : Rohit Sharma break century record at world cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+