Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - கம்பீர் செய்த குழப்பத்தை கவனிச்சீங்களா? இது கிரேக் சேப்பல் ஸ்டைல் ஆச்சே?

மும்பை : இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் செய்த ஒரு குழப்பம் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற போது தான் வெற்றிகரமான ஒரு அணியை தான் வழிநடத்த போகிறேன்.

இதனால் தான் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று கூறினார். ஆனால் இன்று தலைமை பயிற்சியாளராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கம்பீர் ஒரு மாற்றம் செய்திருக்கிறார்.

ind vs sl shubman gill Virat kohli Rohit sharma


50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கி இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என்று தான் பேட்டிங் வரிசை இருந்தது. இந்த நிலையில் கம்பீர் தேவை இல்லாமல் ரோகித் சர்மா ஆட்டமிழந்த உடன் நான்காவது இடத்திற்கு கே எல் ராகுலை அனுப்பாமல் யாருமே எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தரை அனுப்பினார்.

வலது கை பேட்ஸ்மேன், இடது கை பேட்ஸ்மேன் காம்பினேஷன் வேண்டும் என நினைத்திருந்தாலும் அந்த சூழலில் அது தேவையில்லாத ஒரு மாற்றம் ஆகும். வாஷிங்டன் சுந்தருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தாலும், அவர் நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் ஸ்ரேயாஸ் தான் களத்திற்கு வர வேண்டிய சூழல் தள்ளப்பட்டது.

இது தேவையில்லாத ஒரு மூவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த கிரேக் சேப்பல் இதேபோல்தான் தேவையில்லாமல் இந்திய ஒரு நாள் அணியின் பேட்டிங் வரிசையை மாற்றினார். தொடக்க வீரராக களம் இறங்கிய சச்சின் டெண்டுல்கரை நடுவரிசையிலும், நடு வரிசையில் களமிறங்கிய வீரர்களை தொடக்கத்திலும் மாற்றி அமைத்தார்.

இதன் மூலம் இந்திய அணியே உலகக்கோப்பை தொடரில் தோல்வியை தழுவியது. தற்போது கம்பீரின் நடவடிக்கையும் கிரேக் சேப்பல் தான் இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர் ஒரு சாதாரண பவுலர் தான் என்றும் அவருக்கு பேட்டிங் தெரியும் என்பதை மறந்து விட்டு ஏதோ யுவராஜை களம் இறக்குவது போல் கம்பீர் தவறான முடிவை எடுத்து விட்டதாக ரசிகர்கள் குறை கூறுகின்றனர். மேலும் ரோகித் சர்மாவை மீறி இந்த மூவ் நடத்தப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

Story first published: Friday, August 2, 2024, 21:08 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+