கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கடந்த 27 ஆண்டுகளாக இழந்தது கிடையாது என்ற மாபெரும் சாதனை தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் இலங்கை அணி பலமான அணியாக விளங்கினாலும் இந்தியாவிடம் அவர்கள் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடி வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.
2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மட்டும் தான் இலங்கை அணி இந்தியாவை அப்செட் செய்தது. இந்த நிலையில் கடந்த 27 ஆண்டுகளாக இலங்கை அணி இந்தியாவை ஒரு நாள் தொடரில் வென்றதில்லை என்ற சோகமான சாதனை தொடர்ந்து வருகிறது.

1997 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால் அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு தொடர் சமனில் முடிந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய அணி 6 -1 என்ற கணக்கில் வென்றது. இதேபோன்று 2006 ஆம் ஆண்டு மீண்டும் தொடர் சமனில் முடிந்தது.
2007 ஆம் ஆண்டு இந்தியா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்திய நிலையில் 2008 ஆம் ஆண்டு இந்தியா மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வென்றது.2009 ஆம் ஆண்டு நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் வென்ற இந்திய அணி மீண்டும் 2009 ஆம் ஆண்டு மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு இலங்கை அணியை நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் வீழ்த்திய இந்திய அணி 2014 ஆம் ஆண்டு 5 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலும் 2017 ஆம் ஆண்டு 5 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலும் இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள இந்திய அணி 2021 ஆம் ஆண்டும் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் முதல் போட்டி டையில் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. இதில் இரண்டிலும் இந்தியா வென்றால் தொடரை இந்தியா கைப்பற்றி விடும். இல்லை இலங்கை ஒன்று இந்தியா ஒன்று என வென்றால் மீண்டும் தொடர் சமனில் முடிவடைந்து விடும்.