சிக்ஸர் மன்னன் எங்கப்பா!! ஆளையே காணோம்? இந்திய அணியில் இப்படி நடந்து 3 வருஷம் ஆச்சு!
மும்பை : இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ள டி20 தொடரில் டி20 போட்டிகளில் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச டி20 தொடர் ஒன்றில் சிக்ஸர் மன்னனான ரோஹித் சர்மா இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இது இலங்கை தொடரில் இந்திய அணிக்கு சவாலான விஷயமாக அமைந்துள்ளது. இந்திய அணி ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்புமா?

2019இல் ரோஹித் சர்மா
2019இல் ரோஹித் சர்மா இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டார். அதிக சதம் அடித்து இருந்தார். அதே போல, அந்த ஆண்டில் அதிக போட்டிகளில் ஆடிய வீரரும் அவர் தான்.

ஓய்வு அவசியம்
இந்த நிலையில், அவருக்கு ஓய்வு அவசியம் என தேர்வுக் குழு கருதியது. கடந்த மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள மறுத்த ரோஹித் சர்மா, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

மூன்று ஆண்டுகள்
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின் ரோஹித் சர்மா ஒரு சர்வதேச டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். கடைசியாக 2017 ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் ஓய்வு பெற்று இருந்தார்.

மாற்று துவக்க வீரர்கள்
ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் - கேஎல் ராகுல் களமிறங்க உள்ளனர். ராகுல் கடந்த சில போட்டிகளில் துவக்க வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

சிக்கலில் தவான்
ஆனால், ஷிகர் தவான் பார்ம் இழப்பு மற்றும் காயங்களால் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அவர் இலங்கை தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்போது தான் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

முதல் போட்டி எப்போது?
இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி ஜனவரி 5 அன்று அசாம் மாநிலம், கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, இந்தியாவை சந்திக்க உள்ளது.


Click it and Unblock the Notifications