For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SL: சிஎஸ்கே கேப்டனை தூக்கி எறிந்த கம்பீர்.. தன்னம்பிக்கையை உடைக்க பார்க்கும் பிசிசிஐ

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி இருந்தார். எனினும், அவருக்கு டி20 அணியிலும் இடம் அளிக்கப்படாதது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்னணியில் கவுதம் கம்பீர் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இலங்கை தொடரிலிருந்து பொறுப்பேற்று இருக்கிறார். அந்த தொடருக்கான அணித் தேர்விலும் அவரது பங்கு முக்கியமாக இருந்தது. அவர் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்வு செய்து இருக்கிறார். அதே சமயம், சுப்மன் கில்லை விட டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் தேர்வு செய்யவில்லை.

IND vs SL india Sri lanka

ருதுராஜ் கெய்க்வாட் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வரக்கூடிய அனைத்து திறமைகளும் உள்ளவர் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார். அவரைப் பார்த்த அனைத்து முன்னாள் வீரர்களும் பாராட்டி இருக்கின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டாப் ஆர்டரில் அவர்களின் இடத்தை நிரப்ப ருதுராஜ் கெய்க்வாட் சரியான வீரராக இருப்பார் என்ற கருத்து இருந்தது.

ரோஹித் சர்மா, விராட் கோலியைப் போன்று ஒரு நாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என்ன மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் சிறப்பாக ஆடக்கூடிய பேட்டிங் திறன் ருதுராஜ்-இடம் உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஆனால், அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படவில்லை. இதற்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கவுதம் கம்பீருக்கு எப்போதுமே தோனி மீது பொறாமை இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிகளுக்கான பாராட்டுக்கள் அனைத்தும் தோனிக்கு மட்டுமே செல்கிறது. மற்றவர்களுக்கு செல்லவில்லை என கம்பீர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்திருக்கிறார். அந்த உலகக் கோப்பைகளில் கம்பீரும் முக்கிய பங்கை வகித்து இருந்தார். ஆனால், அவருக்கு அதிக பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர் இப்படி சொல்லி வந்தார்.

IND vs SL: இந்திய அணியை யாராலும் காப்பாற்ற முடியாது.. கம்பீர் செய்த மெகா சொதப்பல்.. கதறும் ரசிகர்கள்


அதே போல, ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக இரண்டு கோப்பைகளை வென்ற போதும், தோனி சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்று இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணித்து இருக்கிறார் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

IND vs SL - ரிங்கு சிங் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்.. இனி பினிஷர் யார்? சொதப்பிய தேர்வுக்குழு

2024 ஐபிஎல் தொடரிலும், அதன் பின் நடந்த மகாராஷ்டிரா மாநிலத்திற்கு உட்பட்ட டி20 தொடரிலும் சிறப்பாக ரன் குவித்து இருந்தார் ருதுராஜ் கெய்க்வாட். அதை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் அதிரடியாக ஆடி ஒரு முறை 77 ரன்களும், இரண்டு போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்தார். தொடர்ந்து ரன் குவித்து வரும் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்காததன் மூலம் அவரது தன்னம்பிக்கையை உடைக்கும் முயற்சியா இது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, July 19, 2024, 10:10 [IST]
Other articles published on Jul 19, 2024
English summary
IND vs SL: Is Gautam Gambhir jealous of Ruturaj Gaikwad? Fans think so
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+