Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க பார்த்துக்குறோம்.. நீங்க ப்ரீயா விடுங்க! பும்ராவுக்கு வந்த சிக்கல்.. அதிர வைத்த கங்குலி!

மும்பை : இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ரா தன் பிரச்சனையை பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் தெரிவித்து இருக்கிறார். உடனடியாக முடிவெடுத்த கங்குலி, பும்ராவின் பிரச்சனையை எளிதாக தீர்த்து வைத்துள்ளார்.

பும்ரா காயத்தில் இருந்து குணமாகி இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். எனினும், அடுத்த சர்வதேச தொடர் துவங்கும் முன் அவரை உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு கூறியது இந்திய அணி தேர்வுக் குழு.

உடனடி முடிவு

உடனடி முடிவு

அது அவரது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதிய நிலையில், அது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் முறையிட்டு இருக்கிறார். கங்குலி உடனடியாக முடிவு எடுத்ததால், பும்ரா நிம்மதி அடைந்துள்ளார்.

மூன்று மாதம் கழித்து..

மூன்று மாதம் கழித்து..

பும்ரா கடந்த மூன்று மாதமாக காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அதன் பின் இப்போது தான் முழுமையாக குணம் அடைந்து போட்டிகளில் பங்கேற்க தயாராகி இருக்கிறார். இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு அதை உறுதி செய்தார்.

இலங்கை டி20 தொடர்

இலங்கை டி20 தொடர்

அடுத்து நடக்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் பும்ரா இடம் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் பும்ரா ஆட இருக்கிறார்.

ரஞ்சி போட்டியில் ஆட வேண்டும்

ரஞ்சி போட்டியில் ஆட வேண்டும்

இந்த நிலையில், தேர்வுக் குழுவினர் அவரை ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் ஆடுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. குஜராத் அணியில் பும்ரா இடம் பெற்று, கேரளா அணிக்கு எதிராக ஆடுவார் என தகவல் வெளியானது.

பும்ரா நிலை

பும்ரா நிலை

ஆனால், பும்ரா இந்தப் போட்டியில் ஆட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், காயம் குணமான உடன் டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டாம் என அவர் எண்ணி இருக்கிறார்.

கவனம் சிதறும்

கவனம் சிதறும்

மேலும், அடுத்து டி20 தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில், டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து அவரது கவனத்தை திசை மாற்றும் எனவும் அவர் எண்ணி இருக்கிறார்.

இந்திய அணி கருத்து

இந்திய அணி கருத்து

இந்திய அணி நிர்வாகமும் அதே கருத்தில் தான் இருந்துள்ளது. கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் பும்ரா இப்போதைக்கு உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டியதில்லை என கருதி உள்ளனர்.

டெஸ்ட் தொடர் எப்போது?

டெஸ்ட் தொடர் எப்போது?

இந்தியா அடுத்து பிப்ரவரி மாதம் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடருக்கு தான் பும்ரா அவசியமாக ஆட வேண்டும் என இந்திய அணி திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடாகவே இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா பங்கேற்கிறார். அதனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் தேவைப்பட்டால் அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடலாம் என இந்திய அணி நிர்வாகம் கருதியது.

உதவி கேட்ட பும்ரா

உதவி கேட்ட பும்ரா

இந்த விவகாரத்தில் பும்ரா, பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவரது நிலையை புரிந்து கொண்ட கங்குலி உடனடியாக முடிவு எடுத்து அதிர வைத்தார்.

கங்குலி அதிரடி முடிவு

கங்குலி அதிரடி முடிவு

பும்ரா ரஞ்சி தொடரில் ஆட வேண்டாம் என கூறி உள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, அவரை இப்போதைக்கு குறைந்த ஓவர் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி இருக்கிறார். அதனால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டுள்ளார் பும்ரா.

Story first published: Wednesday, December 25, 2019, 13:33 [IST]
Other articles published on Dec 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+