Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் - இளம் வீரருக்கு மீண்டும் துரோகம்? குழப்பத்தில் ரோகித் சர்மா!

மொஹாலி: இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் மொஹாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெருக்கடியில் இந்தியா

நெருக்கடியில் இந்தியா

விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுள்ளார். இதில் அவருக்கு டெஸ்ட் கேப்டனாக முதல் தொடர் என்பதால், அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, தென்னாப்பிரிக்க தொடரை இழந்ததால், இனி நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டியையும் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

சீனியர்கள் இல்லை

சீனியர்கள் இல்லை

இதனால் கடும் நெருக்கடியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்டில் களமிறங்குகிறது. தொடர்ந்து ஃபார்மில் இல்லாமல் சொதப்பி வந்த ரஹானே, புஜாரா ஆகியோர் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கோலியை தவிர முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட நடுவரிசையை தான் இந்தியா பயன்படுத்த உள்ளது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

கேஎல் ராகுல் காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், முதல் டெஸ்டில் ரோகித்துக்கு ஜோடியாக மாயங் அகர்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காயத்திலிருந்து திரும்பிய சுப்மான் கில் 3வது வீரராக விளையாடுவாரா இல்லை, 5வது வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

India Teamல் தற்போது பெரும் குறை ஒன்று உள்ளது -Salman Butt | Oneindia Tamil
ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி

100வது டெஸ்டில் களம் காணும் விராட் கோலி 4வது வீரராக விளையாடுவார். ஸ்ரேயாஸ் ஐயர் செம ஃபார்மில் உள்ளதால் , அவர் 5வது வீரராக விளையாடுவார். இதனால், டெஸ்ட் வீரராக அறியப்படும் ஹனுமா விஹாரியை புஜாரா இடத்தில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சுப்மான் கில்லுக்கு முக்கியத்துவம் தரப்பட்டால் விஹாரி இலங்கை தொடரிலும் விளையாட முடியாத நிலை போய்விடும். இதனால் யாரை விடுவது யாரை சேர்ப்பது என்று குழப்பத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Story first published: Tuesday, March 1, 2022, 10:05 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+