Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - இந்திய அணி ஜெர்சியில் ஏன் 3 நட்சத்திரம்? வாங்கியது 2 தானே? குழம்பிய ரசிகர்கள்

மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்த போட்டி வெற்றி தோல்வி என்று டையில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி ஜெர்சியில் எப்போதுமே மூன்று நட்சத்திரம் இருக்கும். அதாவது வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றதை குறிப்பிடும் வகையில் இந்த ஜெர்சியில் நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு முன்பு இந்தியா 1983 உலகக் கோப்பை, 2011 உலகக்கோப்பை 2007 டி20 உலக கோப்பை என மூன்று உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் ஜெர்சியின் நட்சத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டி20 போட்டிகளுக்கு என இந்திய அணி தனி ஜெர்சியை பயன்படுத்துகிறது.

ind vs sl shubman gill Virat kohli Rohit sharma


இரண்டு ஜெர்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அதில் டி20 உலக கோப்பை வென்றது குறிப்பிடும் விதமாக இரண்டு நட்சத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக மோதிய தொடரில் கூட இந்த இரண்டு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியை தான் டி20 போட்டிகளில் பயன்படுத்தியது.

2007 மற்றும் 2024 டி20 உலக கோப்பையில் வென்றதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது.இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் கிரிக்கெட்டில் நேற்று பயன்படுத்தப்பட்ட ஜெர்சியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். டி20 போட்டிகளில் தனி ஜெஸ்ஸியை இந்தியா பயன்படுத்தும் சூழலில் ஒரு நாள் ஜெஸ்ஸியில் ஏன் மூன்று நட்சத்திரம் இருக்கிறது என்று குழம்பி விட்டனர்.

டி20 உலக கோப்பையை சேர்க்காமல் இந்தியா 1983 ,2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தான் வென்று இருக்கிறது. இதனால் ஜெர்சியில் இரண்டு நட்சத்திரம் தான் இருந்திருக்க வேண்டும் என்றும் ஒருவேளை டி20 உலக கோப்பையை சேர்த்து இருந்தால் நான்கு நட்சத்திர இருந்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதனால் மூன்று நட்சத்திரம் பொருந்திய ஜெர்சியை ஏன் பிசிசிஐ பயன்படுத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேலை 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதை கணக்கிட்டு பிசிசிஐ இவ்வாறு செய்து இருக்கலாம் என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறினாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Story first published: Saturday, August 3, 2024, 18:07 [IST]
Other articles published on Aug 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+