For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

37 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்த அஸ்வின்! இந்திய டி20 அணி,ஒருநாள் அணியில் வாய்ப்பு தருவாரா கம்பீர்

மும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மீண்டும் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணியில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் ஒரு முக்கிய வீரராக விளங்குகிறார். ஆனால் அதே அஸ்வினை அந்நிய மண்ணில் அவனை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் யோசிக்கும்.

எனினும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அஸ்வின் தன்னுடைய திறமையை நிரூபித்து 2023 உலகக் கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் அந்த தொடரில் விளையாடினார்.

ind vs sl R Ashwin Virat kohli Rohit sharma

அதன் பிறகு அஸ்வின் எந்த ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதேபோன்று டி20 போட்டிகளை பொருத்தவரை 2022 டி20 உலக கோப்பை இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தான் கடைசியாக விளையாடினார். இது போன்று நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும் அஸ்வின் பெரிய தாக்கத்தை பந்துவீச்சில் செய்யவில்லை.

எனினும் டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் திண்டுக்கல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அணியை கோப்பை வெல்ல உதவினார். இந்த தொடரில் அஸ்வின் மூன்று ஹாட்ரிக் அரை சதம் அடித்து பேட்டிங்கில் கலக்கினார்.இதன் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் ஒன்பது இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதேபோன்று பந்துவீச்சில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அஸ்வின் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்திருக்கிறார். இதனால் மீண்டும் அஸ்வின் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அஸ்வினுக்கு தேவையான அங்கீகாரம் இந்திய கிரிக்கெட் கிடைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் கம்பீர் கூறி இருக்கிறார்.

எனினும் அஸ்வினை விட ஒரு நல்ல பேட்ஸ்மேனாக கருதப்படும் ஜடேஜாவுக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அக்சர் பட்டேல், குல்தீப், ரவி பிஷ்னாய் என பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். இதில் அக்சர் பட்டேல் நல்ல பேட்ஸ்மேனாகவும் விளங்குகிறார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அஸ்வின் கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

ஒருவேளை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அஸ்வினின் அனுபவம் வேண்டும் என்று கம்பீர் நினைத்தால் நிச்சயம் இந்திய ஒரு நாள் அணிக்குள் அஸ்வின் வரலாம். வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வந்தால் அஸ்வினுக்கு 38 வயதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 17ஆம் தேதி வந்தால் அஸ்வினுக்கு 38 வயதாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 5, 2024, 23:31 [IST]
Other articles published on Aug 5, 2024
English summary
Ind vs SL - Will Ashwin Makes a comeback to India odi and T20 Team 37 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்த அஸ்வின்! இந்திய டி20 அணி,ஒருநாள் அணியில் வாய்ப்பு தருவாரா கம்பீர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+