Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: குல்தீப் 4 விக்கெட்.. வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான ஸ்கோர்.. இந்தியாவுக்கு 296 ரன்கள் இலக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் முதல் 20 ஓவர்களில் கடும் நெருக்கடி கொடுத்தனர். பின்னர் இந்திய அணி பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்த போதும் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 295 ரன்கள் குவித்தது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடியான ஜான் காம்பெல் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ், முதல் 10 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 85 ரன்களைக் குவித்து மிரட்டினர். ஜான் காம்பெல் 60 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 108 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது.

IND vs WI 1st ODI Kuldeep Yadav took 4 Wickets West Indies Set 296 Target for India

இந்த கூட்டணியை உடைத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இந்திய அணிக்கு அபார கம்பேக் கொடுத்தார். மாயாஜால சுழலில் மிரட்டிய அவர், காம்பெல், கிரீவ்ஸ், கேப்டன் ஷாய் ஹோப் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை அள்ளி 10 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் வெறும் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிதிஷ் குமார் ரெட்டி 5 ஓவர்களில் 45 ரன்களை வாரி இறைத்து 1 விக்கெட் வீழ்த்தினார். குர்னூர் பிரார், ரவீந்திர ஜடேஜா, நமன் திர் ஆகியோர் சராசரியாக ஓவருக்கு 6 ரன்கள் கொடுத்தனர். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

IND vs WI: 32 வயதில் முதல் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவுக்கு தலைவலி

IND vs WI: 32 வயதில் முதல் சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்.. இந்தியாவுக்கு தலைவலி

கடைசி கட்டத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் அமீர் ஜாங்கூ இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

Story first published: Sunday, September 27, 2026, 18:22 [IST]
Other articles published on Sep 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+