Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முட்டி மோதி போராடி வெற்றி பெற்றது இந்தியா.. நவ்தீப் சைனி அபார பவுலிங்.. வெ.இண்டீஸ் சொதப்பல் பேட்டிங்

ப்ளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அதன் முதல் கட்டமாக டி20 தொடர் நடைபெறுகிறது.

முதல் டி20 போட்டியில் ஆடுகளம் மோசமாக இருந்ததால் போட்டி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில், இந்திய அணி போராடி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு முன் மழை

போட்டிக்கு முன் மழை

இந்தப் போட்டி நடந்த மைதானத்தில் முந்தைய நாள் முதல் மழை பெய்து வந்ததால் ஆடுகளம் மூடப்பட்டு இருந்தது. இதனால், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணி வெற்றி பெறும் என கருதப்பட்டது.

வெ.இண்டீஸ் சரிவு

வெ.இண்டீஸ் சரிவு

அதே போல, இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் ஆனார்கள். பூரன் 20 அதிரடியாக ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மானம் காத்த பொல்லார்டு

மானம் காத்த பொல்லார்டு

அதன் பின் வந்த வீரர்களில் கீரான் பொல்லார்டு தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அவர் மட்டுமே பொறுப்பாக ஆடினார். 49 ரன்கள் எடுத்த பொல்லார்டு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சில் அனைவருக்கும் விக்கெட் கிடைத்தது. சைனி 3, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜடேஜா, சுந்தர், கலீல், க்ருனால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சைனி தன் அறிமுகப் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் இரண்டு விக்கெட்கள், கடைசி ஓவரில் மெய்டன் என அசத்தினார்.

இந்திய அணிக்கு அதிர்ச்சி

இந்திய அணிக்கு அதிர்ச்சி

அடுத்து சேஸிங் செய்ய வந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார் தவான். அவர் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் 24, ரிஷப் பண்ட் 0 ஆட்டமிழக்க, இந்திய அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்தது.

போராடி வெற்றி

போராடி வெற்றி

அடுத்து கோலி 19, மனிஷ் பாண்டே 19, க்ருனால் பண்டியா 12 ரன்களில் வெளியேறினர். இலக்கு சிறியது என்பதால் விக்கெட்கள் சரிந்தாலும், இந்திய அணி சமாளித்து 17.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. ஜடேஜா 10, சுந்தர் 8 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Story first published: Saturday, August 3, 2019, 23:44 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+