
கேப்டனாக ரோகித்
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 36 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ரோகித் சர்மா, 30 போட்டிகளில் வென்று தந்துள்ளார். ரோகித் சர்மா டி20 கேப்டனாக வெற்றி சதவீதம் 82 புள்ளி 60 ஆக உள்ளது. இந்தியா கடைசியாக விளையாடிய 7 டி20 போட்டியில் அனைத்திலும் வெற்றி பெற்றது.

ரோகித் சாதனை
இதே போன்று இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி ரோகித் சர்மா, 3237 ரன்களை அடித்து சாதனை படைத்தார். மேலும் 2018ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா, 4 பந்துகளுக்கு ஒரு முறை பவுண்டரி விளாசி, டி20 போட்டியில் அசத்தி வருகிறார்.

முறியடித்த கோலி
இதனையடுத்து விராட் கோலி மீண்டும் களத்திற்கு வந்தார். வழக்கம் போல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிங்கிள்ஸ் ஆடுவதில் கவனம் செலுத்தினார். பின்னர் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். இதன் மூலம் 13 பந்துகளில் 17 ரன்கள் அடித்த விராட் கோலி மீண்டும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார்.
Recommended Video

முதலிடம் யாருக்கு?
தற்போது முதல் இடத்தில் குப்தில் 3299 ரன்களும், விராட் கோலி 3244 ரன்களும், ரோகித் சர்மா 3237 ரன்களும் அடித்துள்ளனர். இந்த தொடர் முடிவதற்குள் விராட் கோலியோ, இல்லை ரோகித் சர்மாவோ முதலிடத்தில் பிடித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 2வது டி20 போட்டி வெள்ளி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











