Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரருக்கு ஏமாற்றம்.. சீனியர் வீரருக்கு கடைசி வாய்ப்பு.. முதல் டி20ல் எதிர்பாராத ப்ளேயிங் 11!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இளம் வீரரை அறிமுகப்படுத்தியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை 3 - 0 என வைட் வாஷ் செய்த இந்திய அணி டி20 தொடரையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையிலான ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளது. கே.எல்.ராகுல் தசைப்பிடிப்பால் வெளியேறியுள்ளதால் இந்த முறையும் கேப்டன் ரோகித்துடன் இஷான் கிஷான் ஓப்பனிங் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

அவர்களுக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல ஷர்துல் தாக்கூரையும் வெளியே உட்காரவைத்துள்ளார் ரோகித் சர்மா.

இளம் வீரருக்கு அதிர்ஷ்டம்

இளம் வீரருக்கு அதிர்ஷ்டம்

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மீண்டும் கூட்டணி சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம் வீரர் ரவி பிஷ்னாய் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு உறுதுணையாக சஹால் விளையாடவுள்ளார்.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது சிராஜுக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் புவனேஷ்வர் குமாருக்கு, தனது திறமையை நிரூபிக்க இது கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

கொல்கத்தா மைதானத்தை பொறுத்தவரையில் நேரம் போக போக பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுலர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே முதலில் பவுலிங்கை செய்யும் அணி எதிரணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டிவிட்டால், 2வது பேட்டிங் செய்யும் போது சுலபமாக இருக்கும். இதன் காரணமாகவே ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Recommended Video

IPL 2022 Auction: 10-crore club, Salary hikes and cuts | OneIndia Tamil
இந்திய அணி ப்ளேயிங் 11

இந்திய அணி ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சஹால், ரவி பிஷ்னாய், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல்

Story first published: Wednesday, February 16, 2022, 19:05 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+