
ப்ளேயிங் 11
ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11லேயே இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணம் யார் ஓப்பனிங் களமிறங்குவார்கள் என்பது தான். துணைக்கேப்டன் கே.எல்.ராகுலுக்கு தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவரின் இடத்தில் இஷான் கிஷான்? அல்லது ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்க வாய்ப்புள்ளது.

ஓப்பனர் யார்
வெஸ்ட் இண்டீஸுக்கான முதல் ஒருநாள் போட்டி தொடரில் ராகுலுக்கு மாற்றாக இஷான் தான் ஓப்பனிங் களமிறங்கி 36 பந்துகளில் 28 ரன்களை அடித்தார். எனவே டி20ல் அனைவரும் எதிர்பார்க்கும்படியே அவர் தான் ஓப்பனிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ருதுராஜை களமிறக்க வேண்டும் என்ற அழுத்தம் ரோகித் சர்மாவுக்கு அதிகரித்துள்ளது.

சிறப்பான ஃபார்ம்
சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில், விஜய் ஹசாரே என அட்டகாசமாக விளையாடியிருந்த ருதுராஜ் கெயிக்காட், இந்திய அணியில் வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2வது ODI போட்டியில் ரிஷப் பண்ட் ஓப்பனிங் களமிறங்கிய போது கூட, ஏன் கெயிக்வாட்-ஐ இறக்கவில்லை என ரசிகர்கள் கொந்தளித்தனர்.
Recommended Video

டிராவிட் ஆலோசனை
தென்னாப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் ODI தொடர் என அணியின் பெஞ்சிலேயே கெயிக்வாட் உட்கார்ந்துள்ளார். அவருக்கு ஒரு போட்டியிலாவது வாய்ப்பு தர வேண்டும். இல்லையென்றால் அவர்களின் நம்பிக்கை உடைந்து ஆட்டமே மாறிவிடும் என முன்னாள் வீரர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால் ரோகித் சர்மா அவரை முதல் போட்டியிலேயே வாய்ப்புகொடுத்து பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாக தெரிகிறது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications