டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து களத்தில் கொடுத்ததை சுப்மன் கில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக நின்று மற்ற அணி ரசிகர்களை கிண்டல் செய்வார்கள்.

ஆனால் தற்போது ஐபிஎல் வந்த பிறகு கில் ரசிகர்கள், கோலி ரசிகர்கள், ரோகித் ரசிகர்கள்,தோனி ரசிகர்கள் என பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது சுப்மன் கில் பெரிய வீரரா? இல்லை ருதுராஜ் பெரிய வீரரா என ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இருவருமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் சர்வதேச கிரிக்கெட்டில் கில்தான் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஆனால் ருதுராஜ் தமக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. கில் மூன்றாவது வீரராக களம் இறங்கி இருக்கிறார். இந்த டெஸ்ட் அணியில் ருதுராஜ் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ருதுராஜ் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து வீரர்களுக்கு வழங்கினார். எப்போதும் பிளேயிங் லெவனின் இல்லாத வீரர்கள் இதுபோன்ற வேலைகளை எந்த ஈகோவும் இன்றி செய்வார்கள். தோனி, விராட் கோலி போன்ற பெரிய வீரர்கள் கூட பிளேயிங் லெவனில் இல்லை என்றாலும் கூட இந்த செயலை செய்து இருக்கிறார்கள்.
ஆனால் இதனை ஒரு பெரிய கேலியாக நினைத்து கில் ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ருதுராஜ் நிலை இதுதான் என்று கிண்டல் செய்து வந்தார்கள். இதற்கு பதிலடி கொடுத்த ருதுராஜ் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து வருவது ஏதும் குறை இல்லை என்றும் ருதுராஜின் எதிர்காலம் சிறப்பாக தான் இருக்கும் என்றும் பதில் கூறியிருக்கிறார்கள்.