Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சோதனை மேல் சோதனை”.. இந்திய அணி 2 முக்கிய வீரர்கள் திடீர் விலகல்?.. 2வது டி20 போட்டியில் சிக்கல்!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Kohli and Pant Leaves Bio Bubble, rested for Sri Lanka's T20 Squad | OneIndia Tamil

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கும் நிலையில் தொடரை கைப்பற்றும் முணைப்புடன் களமிறங்குகிறது.

 2 வீரர்கள் திடீர் விலகல்

2 வீரர்கள் திடீர் விலகல்

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்கள் 2 பேர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தான் அது. முதல் போட்டியில் ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்த போது சஹாருக்கு பெரிய காயம் ஏற்பட்டது. இன்று நடைபெறும் ஃபிட்னஸ் டெஸ்டிலும் தேற மாட்டார் என்பது போல தெரிகிறது.

3 பேருக்கு போட்டி

3 பேருக்கு போட்டி

சஹாருக்கு மாற்று வீரராக அணிக்குள் 3 வீரர்கள் அடித்துக்கொள்கின்றனர். அதாவது இந்தியாவின் முதன்மை தேர்வான முகமது சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் வெளியே காத்துக்கொண்டுள்ளனர். மற்றொரு புறம் பேட்டிங் மற்றும் பவுலிங் என அசத்தும் ஷர்துல் தாக்கூரும் அணியில் இணைய பெரிய வாய்ப்புள்ளது.

தமிழக வீரருக்கு சிக்கல்

தமிழக வீரருக்கு சிக்கல்

தீபக் சஹாரை போன்று தமிழக ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஃபீல்டிங்கின் போது விரலில் காயம் ஏற்பட்டதால் அவர் பங்கு பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஷுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார்.

 சந்தேகம்

சந்தேகம்

ஏற்கனவே ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்த வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டியில் எப்படி ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பார் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. எனினும் அணி விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை தான் தெரியும்.

Story first published: Friday, February 18, 2022, 16:35 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+