Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒருத்தர் தவிர மத்தவங்க அரண்டு ஓடிட்டாங்க.. வெ.இண்டீஸ் நிலைமை இப்படி ஆகிப் போச்சே #INDvsWI

ப்ளோரிடா : இந்தியா - வெ.இண்டீஸ் இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் கலக்கியது.

இந்தப் போட்டியில் முக்கியமாக கருதப்பட்ட டாஸ்-ஐ கேப்டன் கோலி வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதை தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக அமைந்தது.

முதல் ஓவரை வீசிய வாஷிங்க்டன் சுந்தர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் காம்பெல் விக்கெட்டை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். காம்பெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

நிக்கோலஸ் பூரன் அவசரம்

நிக்கோலஸ் பூரன் அவசரம்

மற்றொரு துவக்க வீரர் லீவிஸ் புவனேஸ்வர் குமார் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். நிக்கோலஸ் பூரன் எப்போதும் போல அதிரடி காட்டினார். 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த அவர் விக்கெட் விழுந்தாலும் பொறுமையாக ஆடாமல் அதிரடி காட்ட முயன்று சைனி பந்தில் பண்ட்-டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விக்கெட் சரிவு

தொடர்ந்து விக்கெட் சரிவு

பூரன் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே ஹெட்மயர், சைனி பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அடுத்து பாவல் 4, பிராத்வைட் 9, சுனில் நரைன் 2, கீமோ பால் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கீரான் பொல்லார்டு மட்டுமே தாக்குப் பிடித்து ஆடினார். பந்துகளை தேர்வு செய்து ஆடிய அவர் 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

காப்பாற்றிய பொல்லார்டு

காப்பாற்றிய பொல்லார்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. கீரான் பொல்லார்டும் விரைவில் விக்கெட்டை இழந்து இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்களை கூட தாண்டி இருக்காது.

வெ.இண்டீஸ் ஏமாற்றம்

வெ.இண்டீஸ் ஏமாற்றம்

கேப்டன் கார்லோஸ் பிராத்வைட், சுனில் நரைன் போன்றோர் பேட்டிங் வரிசையில் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இறங்கினர். அவர்கள் இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியும் கடைசி ஓவர்களில் ரன் குவித்து இந்திய அணிக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களும் கை விட்டது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இந்தியா பந்து வீச்சு

இந்தியா பந்து வீச்சு

இந்திய அணியில் அறிமுகமான நவ்தீப் சைனி அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்கள் சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 2, சுந்தர் 1, கலீல், 1 ஜடேஜா 1, க்ருனால் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்ததை விட அபாரமாக இருந்தது. அதற்கு ஆடுகளம் மழையால் ஈரப்பதமாக இருந்ததும் முக்கிய காரணம்.

Story first published: Saturday, August 3, 2019, 21:58 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+