Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவானுக்கு ஆப்பு வைக்க வரும் அதிரடி வீரர்.. டெஸ்ட் அணியும் போச்சு.. டி20யும் போச்சு!

Recommended Video

Kl Rahul Vs Dhawan : தவனுக்கு மாற்றாக கொண்டுவரப்போகும் வீரர் இவர்தான்- வீடியோ

மியாமி: இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக வலம் வரும் ஷிகர் தவான் இடத்தை பறிக்க அணியில் ஒரு வீரர் தயாராக இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா ஆட உள்ள நிலையில், இந்த தொடரிலேயே தவானை மாற்ற வாய்ப்பு உள்ளது.

அது அத்தனை எளிது இல்லை என்றாலும் புள்ளி விவரங்கள் மற்றும் சூழ்நிலைகள் தவானுக்கு எதிராக அமைந்துள்ளது. .

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், 2020 டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இந்திய அணி செயல்பட உள்ளது. அதன் முதல் கட்டமாக அணியில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துவக்க வீரர் இடத்துக்கு போட்டி

துவக்க வீரர் இடத்துக்கு போட்டி

புதிய வீரர்கள் மிடில் ஆர்டருக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துவக்க வீரராக களமிறங்க இந்திய அணியில் தற்போது மூன்று பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஹித் சர்மா, தவான் இருவரும் அனுபவ வீரர்களாக இருக்கும் நிலையில், கேஎல் ராகுலும் மாற்று வீரராக அணியில் இடம் பெற்று வருகிறார்.

ராகுல் அசத்தல் பார்ம்

ராகுல் அசத்தல் பார்ம்

ராகுல் கடந்த ஐபிஎல் தொடர் முதல் உலகக்கோப்பை வரை நல்ல பார்மில் இருந்தார். அதே பார்மை இப்போதும் தொடர்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தவான் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த போது, துவக்க வீரராக களமிறங்கி தன்னை நிரூபித்தார் ராகுல்.

சராசரி அதிகம்

சராசரி அதிகம்

ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் எப்போதும் ராகுல் அசத்தலாக ஆடி வந்துள்ளார். 24 இன்னிங்க்ஸ்களில் அவரது டி20 பேட்டிங் சராசரி 44 ஆகும். 879 ரன்கள் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 149.2 ஆகும். தவானின் ஸ்ட்ரைக் ரேட் 130 மட்டுமே. சராசரி 28.5.

ஐபிஎல் செயல்பாடு

ஐபிஎல் செயல்பாடு

கடந்த இரு ஐபிஎல் தொடரிலும் ராகுல் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இடம் பிடித்து இருக்கிறார். ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் என்றாலே அதிரடி பார்முக்கு வந்து விடுகிறார் ராகுல்.

கழட்டி விடப்படுவாரா தவான்?

கழட்டி விடப்படுவாரா தவான்?

இதை காரணமாக வைத்தே தவானை டி20 அணியில் இருந்து நீக்கி விட வாய்ப்புள்ளது. ஒரு தொடரில் தவான் சரியாக ஆடவில்லை என்றாலும், அதை வைத்து ராகுலை துவக்க வீரராக களம் இறக்குவார்கள்.

டெஸ்ட் அணியில் இல்லை

டெஸ்ட் அணியில் இல்லை

ஏற்கனவே, தவான் டெஸ்ட் அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடவில்லை என்று அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் தவானுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல தற்போது 2020 டி20 தொடரில் தவான் விளையாடாமல் போனாலும் ஆச்சரியமில்லை.

Story first published: Saturday, August 3, 2019, 11:04 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+