Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI : இந்தியாவை சுற்றி சுற்றி அடிக்கும் விதி.. அதே செமி பைனல் கண்டம்.. திகில் கிளப்பும் தகவல்!

Recommended Video

Ind vs Wi : முதல் இரண்டு டி20 போட்டிகளில் மழை வரலாம்..இந்தியாவை சுற்றி சுற்றி அடிக்கும் விதி-வீடியோ

ப்ளோரிடா : ப்ளோரிடாவில் நடைபெற உள்ள முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் மழை வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா நகரில் நடைபெற உள்ளது.

மழை வரலாம்

மழை வரலாம்

ப்ளோரிடாவில் தற்போது இருக்கும் கால சூழ்நிலையில், மழை, இடி, மின்னல் எல்லாம் சகஜம், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என கூறப்படுகிறது. அதிலும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகள் நடைபெற உள்ள சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் 65% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

செமி பைனல் ஆபத்து

செமி பைனல் ஆபத்து

மழையால் போட்டி பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே, இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்து அதில் இருந்து மீண்டு வர வெஸ்ட் இண்டீஸ் தொடரை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இந்த தொடரிலும் மழை என்றால் என்ன செய்வது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை சம்பவம்

உலகக்கோப்பை சம்பவம்

அரையிறுதிப் போட்டியில் மழையின் காரணமாக போட்டி இரு நாட்களாக நடந்ததும், மோசமான பிட்ச்சில் நடந்த போட்டி, மழையால் இன்னும் மோசமாகி இந்திய அணிக்கு ஆப்பு வைத்ததும் மறக்க முடியாத சம்பவங்கள். அதே திகில் சம்பவம், உலகக்கோப்பை முடிந்து இந்தியா ஆடும் முதல் போட்டியிலும் தொடருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தயாராக இருக்கிறதா?

தயாராக இருக்கிறதா?

உலகக்கோப்பை தொடரில் முதல் நாள் நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடும் போது பிட்ச் மந்தமாக இருந்தது. ஆனால், இரண்டாம் நாளின் முதல் பகுதியில் பந்துகள் அருமையாக ஸ்விங் ஆனது. பேட்டிங் செய்யவே முடியாத நிலை இருந்தது. ப்ளோரிடாவிலும் அதே நிலை ஏற்பட்டால் இந்திய அணி அதற்கு தயாராக இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டாஸ் மிகவும் முக்கியம்

டாஸ் மிகவும் முக்கியம்

இந்த சூழ்நிலையால், டாஸ் வெல்வது மிகவும் முக்கியம் என கூறப்படுகிறது. யார் டாஸ் வெல்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக போட்டி மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. கோலியின் டாஸ் ராசி வேறு நமக்கு பயம் காட்டுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

போட்டிக்கு முந்தைய தினம் மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்வதே சிறப்பு. முதலில் பேட்டிங் செய்யும் அணி முதல் சில ஓவர்கள் தடுமாறித் தான் ஆக வேண்டும். இந்திய அணி இந்த கண்டத்தில் இருந்து தப்பிக்குமா?

Story first published: Saturday, August 3, 2019, 16:54 [IST]
Other articles published on Aug 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+