For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே.. இவர் தான் அடுத்த தோனியா? வாங்கிக் கட்டிக் கொண்ட இளம் வீரர்! #INDvsWI

Recommended Video

IND VS WI 2019 1ST T20 | பொறுப்பே இல்லாமல் ஆடிய பண்ட்! தொடரும் விமர்சனங்கள்

ப்ளோரிடா : தோனிக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் பொறுப்பில்லாமல் பேட்டிங்கில் ஆட்டமிழந்தார். ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட்டை நம்பி பேட்டிங் வரிசையில் முன்னே ஆட வைத்தார் கேப்டன் கோலி. ஆனால், பண்ட் எப்போதும் போல தன் வேலையைக் காட்டினார்.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானம் காட்டாமல் அடித்து ஆட முயன்று விக்கெட்களை விரைவாக இழந்தது. பிட்ச்சும் மோசமாக இருந்ததால், ரன் குவிக்க முடியாத நிலை இருந்தது. 20 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

எளிதான இலக்கை துரத்தத் துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தியா 6.3 ஓவர்களில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து இருந்தது.

முன்னே வந்த ரிஷப் பண்ட்

முன்னே வந்த ரிஷப் பண்ட்

நான்காவது வரிசையில் மனிஷ் பாண்டே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட்டை பேட்டிங் செய்ய அழைத்தார் கோலி. இளம் வீரருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு என கூறிக் கொண்டு இருந்த போது அந்த சம்பவம் நடந்தது.

பொறுப்பில்லாத ஷாட்

பொறுப்பில்லாத ஷாட்

ரோஹித் ஆட்டமிழந்து சென்ற அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். எந்த கட்டாயமும் இன்றி தான் ஆடிய முதல் பந்தை அடித்து ஆட முயன்றார். பந்து எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டது. இது மிக மோசமான ஷாட், தேவையே இல்லாத ஷாட் என விமர்சகர்கள் கூறினர்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

ரிஷப் பண்ட்டை பெரிதாக நம்பிய ரசிகர்கள் பலர் அவர் விரைவாக ஆட்டமிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ரிஷப் பண்ட் இன்னும் முழுமையான பேட்ஸ்மேன் இல்லை. இனிமேல் தான் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். இவர் தான் அடுத்த தோனியா? என கடுமையாக விமர்சித்தனர்.

ஆதரவும் உண்டு

ஆதரவும் உண்டு

எனினும் சில ரசிகர்கள், ரிஷப் பண்ட் ஒன்று அடிப்பார், இல்லை ஆட்டமிழப்பார். அது தான் அவர் பாணி. அதை குறை சொல்லக் கூடாது என்றும் கூறி வருகிறார்கள். எப்படி இருந்தாலும், ரன் குவிக்கவில்லை என்றால் அணியில் இடம் பறிபோகும் என்பதே உண்மை.

Story first published: Sunday, August 4, 2019, 10:00 [IST]
Other articles published on Aug 4, 2019
English summary
IND vs WI 2019 1st T20 : Rishabh Pant got out on a poor shot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+