
இந்தியா - வெ.இண்டீஸ் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 297 ரன்கள் எடுத்தது,. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸில் 222 ரன்கள் சேர்த்தது. இந்தியா 75 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடியது.

ரஹானே சதம்
இரண்டாம் இன்னிங்க்ஸில் கேப்டன் கோலி 51 ரன்கள் எடுத்தார். ரஹானே, விஹாரி கூட்டணி சேர்ந்து இந்திய அணியை பெரிய ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்த முயற்சியில் ரஹானே சதம் அடித்தார்.

இரண்டு ஆண்டுகள்
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் அடித்துள்ளார். இது அவரது 10வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். முதல் இன்னிங்க்ஸிலும் ரஹானே அபாரமாக ஆடி இருந்தார்.

முதல் இன்னிங்க்ஸ் அபாரம்
முதல் இன்னிங்க்ஸ் இந்தியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது கை கொடுத்த ரஹானே 81 ரன்கள் சேர்த்தார். அப்போது சதத்தை தவறவிட்டாலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். 1௦2 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பழைய கதை
ஒரு காலத்தில் கோலிக்கு நிகராக புகழப்பட்டவர் தான் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக வெளிநாடுகளில் ரன் மழை பொழிந்தார். அதனால் தான் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பு தேடி வந்தது.

இனி பேச முடியாது
ஆனால், அதன் பின் சரியாக ரன் எடுக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடி வந்த அவர் அவ்வப்போது அரைசதம் அடித்தார். கடந்த இரு ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். அதனால், எழுந்த அத்தனை விமர்சனங்களையும் ஒரே போட்டியில், இரண்டு இன்னிங்க்ஸிலும் ரன் குவித்து மாற்றிக் காட்டி இருக்கிறார். இனி யாரும் ரஹானே பார்ம் பற்றி பேச முடியாது.

பெரிய ஸ்கோர்
இந்திய அணி ரஹானே ஆட்டமிழந்த போது 322 ரன்கள் குவித்து இருந்தது. ஹனுமா விஹாரி அரைசதம் கடந்து ஆடி வந்தார்.. இந்திய அணி 400 ரன்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 400க்கும் மேற்பட்ட ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயிக்கும்.


Click it and Unblock the Notifications