Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு மூணு.. இவரு ஒண்ணு தாங்க.. முதல் டெஸ்டில் அஸ்வினை கழட்டிவிட காரணம் கிடைச்சாச்சு!

Recommended Video

IND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்!- வீடியோ

கூலிட்ஜ் : இந்திய அணியின் அஸ்வின் - குல்தீப் யாதவ் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 முதல் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி யார், யாரை களமிறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்வின் சிக்கல்

அஸ்வின் சிக்கல்

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இடம் பெறுவாரா? அல்லது அஸ்வின் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரும் தகவல்களின் படி அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்கிறார்கள்.

ஆஸ்திரேலிய தொடர் காயம்

ஆஸ்திரேலிய தொடர் காயம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதல் டெஸ்டுக்குப் பின் அஸ்வின் யம் அடைந்தார். அப்போது மாற்று வீரராக அணியில் இருந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மீதம் இருந்த இரண்டு போட்டிகளில் ஆடினார்.

குல்தீப் அசத்தல்

குல்தீப் அசத்தல்

அந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விக்கெட்கள் வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் நம்பிக்கையைப் பெற்றார். அப்போது முதல் அவர் தான் இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர் என ரவி சாஸ்திரி கூறி வருகிறார்.

வெளிநாடுகளில் சொதப்பல்

வெளிநாடுகளில் சொதப்பல்

இது ஒருபுறம் என்றால், அஸ்வினின் வெளிநாட்டு பந்துவீச்சு புள்ளி விவரமும் அவருக்கு பாதகமாக உள்ளது. இந்தியாவில் ஆடிய 31 டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள அஸ்வின், வெளிநாடுகளில் 26 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்கள் தான் வீழ்த்தி உள்ளார்.

பயிற்சிப் போட்டியில் என்ன ஆச்சு?

பயிற்சிப் போட்டியில் என்ன ஆச்சு?

மேலும், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக நடந்த பயிற்சிப் போட்டியில் குல்தீப் யாதவ் 9.1 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அஸ்வின் 8 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

குல்தீப் வாய்ப்பு பெறுவார்

குல்தீப் வாய்ப்பு பெறுவார்

பயிற்சிப் போட்டியை காரணம் காட்டி அஸ்வின் அணியில் இருந்து கழட்டி விடப்படுவார் என்கிறார்கள். குல்தீப் யாதவ் சமீப காலமாக குறைந்த ஓவர் போட்டிகளில் பார்ம் அவுட்டில் தான் இருக்கிறார். எனினும், அவர் முதல் டெஸ்டில் ஆடவே வாய்ப்பு அதிகம். அவருடன் ஜடேஜா அணியில் இடம் பெறவும் வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Wednesday, August 21, 2019, 16:14 [IST]
Other articles published on Aug 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+