Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரைசதம் போட்ட பூம் பூம் பும்ரா.. அஸ்வின் டெஸ்ட் ரெக்கார்டை தாறுமாறாக உடைத்து எறிந்தார்!

ஆன்டிகுவா : வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அஸ்வினின் அசத்தல் டெஸ்ட் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். மேலும் பல டெஸ்ட் சாதனைகளையும் செய்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆன்டிகுவா மைதானத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன.

முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஜடேஜா, ரஹானே கை கொடுக்க இந்திய அணி 296 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்துள்ளது.

50வது விக்கெட்

50வது விக்கெட்

இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அது அவரது 50வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. டேரன் பிராவோ 18 ரன்கள் எடுத்து இருந்த போது பும்ராவின் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

குறைந்த போட்டிகள்

குறைந்த போட்டிகள்

இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் பும்ரா.

வேகத்தில் முதல் இடம்

வேகத்தில் முதல் இடம்

பும்ரா 11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத் / ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் / ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி / கபில் தேவ் (16 போட்டிகள்) உள்ளனர்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

அதே போல ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போடிட்களிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்கள் வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

குறைந்த பந்துகள்

குறைந்த பந்துகள்

போட்டிகளில் அஸ்வினை விட பின்தங்கி இருந்தாலும், குறைந்த பந்துகளில் 50 விக்கெட்கள் வீழ்த்தி அவரை முந்தி உள்ளார். 2465 பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்கள் சாய்த்துள்ளார் பும்ரா. குறைந்த பந்துகள் பட்டியலில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா.

அஸ்வினை வீழ்த்தினார்

அஸ்வினை வீழ்த்தினார்

அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்கள் சாய்த்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காவ்ரி (2606 பந்துகள்), உமேஷ் யாதவ் (2694 பந்துகள்), ஷமி (2753 பந்துகள்) அடுத்த இடங்களில் உள்ளனர்.

பும்ரா நம்பர் 1

பும்ரா நம்பர் 1

பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். 11 போட்டிகளிலேயே விக்கெட்களில் அரைசதம் அடித்து தன் முத்திரையை ஆழமாக பதித்துள்ளார் பும்ரா.

Story first published: Saturday, August 24, 2019, 11:16 [IST]
Other articles published on Aug 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+