Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை பார்த்தாலே ஹேங்ஓவர் தலைவலி தான்.. பாட்டில் பாட்டிலாக பாராட்டிய வெ.இண்டீஸ் ரசிகர்கள்!

Recommended Video

Watch Video : Bumrah is like liquor says west indies fans

கிங்க்ஸ்டன் : பும்ராவை பார்த்து மெர்சல் ஆகி, வியந்து போய் உள்ளனர் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தான் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு புகழ் பெற்றது. அந்த அணி தான் 70, 80களில் உலகின் அனைத்து அணிகளுக்கும் வேகப் பந்துவீச்சு பற்றி பாடம் எடுத்துக் கொண்டு இருந்தது.

அந்த அணியின் ரசிகர்களையே மெய் மறக்க வைத்துள்ளார் பும்ரா. அப்படி மெய் மறந்து போன ரசிகர்கள், பும்ராவை "சரக்கோடு" ஒப்பிட்டு புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அதற்கும் காரணமும் கூறுகிறார்கள்.

வெ.இண்டீஸ்-இல் அசத்தல்

வெ.இண்டீஸ்-இல் அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா 13 விக்கெட்கள் வீழ்த்தினார். அதில் இரண்டு இன்னிங்க்ஸில் 5 விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார்.

ஹாட்ரிக் எடுத்தார் பும்ரா

ஹாட்ரிக் எடுத்தார் பும்ரா

அது மட்டுமின்றி, ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து அசத்தினார் பும்ரா. இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா.

7 ரன்களுக்கு 5

7 ரன்களுக்கு 5

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் 8 ஓவர்கள் பந்துவீசி 7 ரன் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார் பும்ரா. அது போன்ற பந்துவீச்சை பார்த்ததாக நினைவில் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு ஜாம்பவான்களே பாராட்டினார்கள்.

வெ.இண்டீஸ் ரசிகர்கள் பிரமிப்பு

வெ.இண்டீஸ் ரசிகர்கள் பிரமிப்பு

அதே போல, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ரசிகர்கள் பும்ராவின் பந்துவீச்சை கண்டு யார் இவர்? என வியப்பில் ஆழ்ந்து உள்ளனர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பும்ரா பற்றி பேசிய சில விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

தலை சுற்றி விடும்

தலை சுற்றி விடும்

சிலர் பும்ராவை மதுபானங்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளனர். அவர் பந்து வீசுவது ஜூஸ் குடிப்பது போல தான் இருக்கும். ஆனால், தலை சுற்றி விடும். எப்படி அவர் குறைந்த தூரம் ஓடி வந்து அத்தனை வேகத்தை உண்டாக்குகிறார். அவர் இந்தியனா? அவர் மனிதனா? என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

பும்ரா ரம் மாதிரி..

பும்ரா ரம் மாதிரி..

இந்த மனிதர் பும்ரா ரம் மாதிரி. உங்களை வேகமாக சாய்த்து விடுவார் என ஒருவர் அலப்பறையாக ரம்முடன் ஒப்பிட்டு பேசி காரணம் கூறி இருக்கிறார். பல ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த ஜமைக்கன் மதுபான பெயர்களை கூறி, பும்ராவை பாராட்டி இருக்கிறார்கள். அவரை பார்த்தாலே வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு "ஹேங்ஓவர்" தலைவலி வந்துவிடும் என்றும் கூறி உள்ளனர்.

அவர் ஜமைக்கன் ஆத்மா

அவர் ஜமைக்கன் ஆத்மா

மேலும் சிலர், பும்ரா இந்தியர் என்றாலும், அவருக்குள் இருப்பது ஜமைக்கன் ஆத்மா. அதனால் தான் அவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் போல பந்துவீச்சில் மிரட்டுகிறார் என்றும் கூறி உள்ளனர்.

தரவரிசை முன்னேற்றம்

தரவரிசை முன்னேற்றம்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருடன் பும்ரா 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். எனினும், அதற்குள் டெஸ்ட் போட்டி தரவரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்து வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

Story first published: Thursday, September 5, 2019, 15:06 [IST]
Other articles published on Sep 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+