
மழையால் பாதித்த போட்டி
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மழை பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. முதல் சில மணி நேரம் பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்தது. அப்போது டாஸில் தோற்ற இந்திய அணி பேட்டிங் செய்து தடுமாறியது.

இந்தியா 297 ரன்கள்
புஜாரா, கோலி ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்தது இந்திய அணி. பின்னர் ரஹானே 81, ஜடேஜா 58 ரன்கள் அடிக்க, இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

வெ.இண்டீஸ் அபாரம்
அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து ரன் குவித்து வந்தது. 50 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தாலும், பின்னர் 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து ஆடி வந்தது. இரண்டாம் நாளின் இறுதிக் கட்டத்தை எட்டி இருந்தது போட்டி.

மாற்றம் சொன்ன பும்ரா
அப்போது இடையே பெய்த மழையால் ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்துவீச்சில் எதுவும் எடுபடவில்லை. அப்போது இளம் வீரர் பும்ரா , கிராஸ் சீம்-இல் பந்து வீசலாம் என கூறி இருக்கிறார். அதே போல, பந்தின் தையல் பகுதிக்கு குறுக்கே பந்தை வீசினார் இஷாந்த் சர்மா.

இஷாந்த் சர்மா அசத்தல்
கடைசி சில ஓவர்களில் சராமரியாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதற்கு முன்னதாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி இருந்த அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 179 ரன்களுக்கு 8 விக்கெட்கள் என்ற நிலையை அடைந்தது.

மூத்த வீரருக்கு..
அணியில் மூத்த வீரரான இஷாந்த் சர்மாவுக்கு என்ன வித்தை செய்யலாம் எனக் கூறி கலக்கி இருக்கிறார் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளரான பும்ரா. இத்தனைக்கும் பும்ரா தன் 11வது டெஸ்ட் போட்டியில் தான் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications