Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன மேட்ச் புட்டுகிச்சு.. இனிமே விடமாட்டேன்.. லாரா சாதனையை முறியடிக்க முட்டி மோதும் கிறிஸ் கெயில்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தன் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வரும் நிலையில், பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரையன் லாராவுக்கு பின் அதிக ரன்கள் குவித்து பெரும் புகழ் பெற்ற வீரர் என்றால் அது கிறிஸ் கெயில் மட்டும் தான்.

அதிரடி மன்னனான கிறிஸ் கெயில் பிரையன் லாராவின் சாதனைக்கு மிக அருகே இருக்கிறார். எனினும், அதை ஒரே போட்டியில் முறியடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் மூத்த வீரர்

வெஸ்ட் இண்டீஸ் மூத்த வீரர்

தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கும் மூத்த வீரர்களில் ஒருவர் கிறிஸ் கெயில். பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் கெயில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

ஒருநாள் அரங்கில் சாதனை

ஒருநாள் அரங்கில் சாதனை

இந்த தொடரில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ள நிலையில், கெயில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இன்னும் 7 ரன்களே தேவை. இந்த தொடர் துவங்கும் முன் 11 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது. எனினும் கெயில் முதல் போட்டியில் தட்டுத் தடுமாறி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

லாரா சாதனை

லாரா சாதனை

இந்த நிலையில் தற்போது 7 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் பிரையன் லாரா ஒருநாள் போட்டிகளில் எடுத்த 10,348 ரன்களை முந்துவார் கிறிஸ் கெயில். பிரையன் லாரா 2007இல் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவரது சாதனையை முறியடிக்க உள்ளார் கிறிஸ் கெயில்.

கெயில் சொதப்பல்

கெயில் சொதப்பல்

இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே கெயில் இந்த சாதனையை முறியடித்து இருக்கலாம். எனினும், அந்தப் போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 4 ரன்கள் எடுத்து வெறுப்பேற்றினார். எளிதாக கடக்க வேண்டிய சாதனையை சிக்கலாக மாற்றிக் கொண்டார்.

அதிக போட்டி சாதனை

அதிக போட்டி சாதனை

எனினும், முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்றதன் மூலம் பிரையன் லாராவை விட அதிக ஒருநாள் போட்டிகள் ஆடிய வீரர் என்ற சாதனையை செய்தார் கெயில். லாரா 295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், கிறிஸ் கெயில் 296 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.

Story first published: Sunday, August 11, 2019, 15:59 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+